வெள்ள நிவாரணப்பணி: நிதி அனுப்ப வேண்டிய மத்திய அரசு பில் அனுப்பிய கொடுமை!
- IndiaGlitz, [Friday,November 30 2018]
கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை மற்றும் பெருவெள்ள, ஏற்பட்டு பெரும் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மிட்க இந்திய ராணுவத்தின் உதவியை கேரள அரசு கோரியதால் இந்திய விமானப்படை கேரளாவுக்கு விரைந்து பல உயிர்களை காப்பாற்றியது.
இந்த நிலையில் கேரளாவில் இந்திய விமானப்படை மீட்புப்பணிகளை செய்ததற்கு மத்திய அரசு கேரளாவுக்கு ரூ.33 கோடி பில் அனுப்பியுள்ளது. இதனை கேரள முதல்வர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மத்திய அரசின் பல்வேறு உதவிகளுக்காக கேரளா, 290 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஒரு மாநிலத்தில் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் அந்த மாநில மக்களை காக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கும் நிலையில் கார்ப்பரேட் நிறுவனம் போல் பில் அனுப்பியுள்ளதாக கேரள நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.