மத்திய அரசிடம் இருந்து நடிகர் பிருத்விராஜ்க்கு கிடைத்த பாராட்டு? வைரல் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவரும் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனுக்கு மத்திய அரசிடம் இருந்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படும் தகவல் அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவரும் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மற்ற மொழி படங்களிலும் பிசியாக நடித்துவருகிறார். அதிலும் ஹீரோ, வில்லன் என்று பல வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வரும் இவர் தமிழ் சினிமாவில் ‘மொழி’, ‘பாரிஜாதம்’, ‘சத்தம்போடாதே’, ‘காவியத்தலைவன்’, ‘ராவணன்’ என்று பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
நடிப்பை தவிர சமீபத்தில் ‘லூசிஃபர்’, ‘ப்ரோ டாடி’ என்று இரு ஹிட் திரைப்படங்களை இயக்கி இயக்குநர் அவதாரத்தையும் தக்க வைத்துள்ளார். மேலும் கடந்த 2019 இல் சொந்த பெயரிலேயே தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கிய நடிகர் பிருத்விராஜ் தான் நடித்த ‘நைன்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட நிலையில் தற்போது பல திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரித்து வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பாக பட விநியோகமும் செய்துவரும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’, நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’, ‘கே.ஜி.எஃப் 2’, ‘காந்தாரா‘ உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமையைப் பெற்று கேரளத்தில் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி சினிமா நடிகர், வில்லன், அடுத்து இயக்குநர், அடுத்து தயாரிப்பாளர் என்று பல அவதாரங்களில் தொடர்ந்து வெற்றியை அடைந்துவரும் நடிகர் பிருத்விராஜ் சமீபத்தில் ‘விளையத் புத்தர்‘ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது முழங்காலில் காயம் ஏற்பட்டு ஹீகோல் அறுவை சிகிச்சை கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் 2 அல்லது 3 மாதங்கள் வரை அவர் ஓய்வில் இருப்பார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு அவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்து இருக்கிறது. அதாவது பிருத்திவிராஜ் நடத்திவரும் தயாரிப்பு நிறுவனம் 2022-2023 நிதியாண்டில் நிலுவையில்லாமல் ஜிஎஸ்டி உட்பட அனைத்து வரிகளையும் செலுத்தியதால் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள மறைமுக வரிகள் வாரியம் அவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதையடுத்து ரசிகர்களும் பிரபலங்களும் நடிகர் பிருத்விராஜ்க்கு வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments