ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீடிக்க திட்டமா? பரபரப்பு தகவல்
- IndiaGlitz, [Tuesday,April 07 2020]
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஊரடங்கு உத்தரவு முடிய ஏழு நாட்களே உள்ளது
ஏப்ரல் 21ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் இயல்பு நிலை திரும்பும் என பொதுமக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஏப்ரல் 14ம் தேதிக்குப் பின்னரும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
பல மாநில அரசுகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊரடங்கு உத்தரவு காலத்தை நீட்டிக்கக் கோரி ஆலோசனை கூறி வருவதாகவும் இதனை அடுத்து மத்திய அரசு இது தொடர்பாக விரைவில் அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
ஊரடங்கு உத்தரவு காலத்தில் இந்தியாவில் ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கும் கொரோனா வைரஸ், ஊரடங்கு உத்தரவை நீக்கிவிட்டால் அதிகரிக்க வாய்ப்பு இருக்கலாம் என வல்லுநர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வருகிறது