நடிகர் மாதவனுக்கு மத்திய அரசு கொடுத்த சிறப்பு பதவி.. குவியும் வாழ்த்துக்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மாதவன் நடித்து, இயக்கி, தயாரித்த ’ராக்கெட்டரி’ என்ற திரைப்படத்திற்கு சமீபத்தில் தேசிய விருது கிடைத்த நிலையில் தற்போது மத்திய அரசு அவருக்கு சிறப்பு பதவியை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மாதவன் என்பதும் அவர் நடித்த பல திரைப்படங்கள் ஹிட் ஆகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் புனவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் மாதவன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
’ராக்கெட்டரி’ திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் மாதவன் தற்போது மத்திய அரசின் புதிய பதவியும் கிடைத்துள்ளதை அடுத்து அவர் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளார். இதையடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் மாதவன் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம், நயன்தாராவுடன் நடிக்கும் ’டெஸ்ட்’ திரைப்படம் மற்றும் ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாறு திரைப்படம் என மூன்று தமிழ் படங்களிலும் இரண்டு ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments