நாளை விளக்குகளை அணைத்தால் மின்கட்டமைப்பு பழுதாகுமா? மத்திய அரசு விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாட்டு மக்களிடம் உரையாடியபோது ஏப்ரல் ஐந்தாம் தேதி ஞாயிறு இரவு 9 மணிக்கு அனைவரும் வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட் ஆகியவற்றை ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்
பிரதமரின் இந்த வேண்டுகோள் பலரால் கிண்டலடிக்கப்பட்டு, ஒரு சிலரால் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரதமரின் இந்த வேண்டுகோளுக்கு பின்னால் ஒரு அர்த்தம் இருப்பதாகவும், அதாவது ஏப்ரல் 5ஆம் தேதி ஒன்பது கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வருவதாகவும், அப்போது மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்கு ஏற்றினால் எந்த வித வைரசும் அழிந்துவிடும் என்றும் வதந்திகளை பரப்பி வருகின்றனர்
இந்த நிலையில் மத்திய மின் துறை அமைச்சகம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை நாட்டு மக்களுக்கு அறிவித்து உள்ளது பிரதமர் வேண்டுகோளின்படி நாளை வீட்டில் உள்ள விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும் என்றும் வீட்டிலுள்ள கணினிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள் போன்ற மின் சாதனங்களை அணைக்க தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல் மருத்துவமனைகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான விளக்குகளையும் அணைக்க வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் விளக்குகளை அணைத்து விட்டு மீண்டும் ஒரே நேரத்தில் விளக்குகளை ஆன் செய்தால் மின் கட்டமைப்பு பழுதாகும் என்ற வதந்திக்கும் மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments