"நேர்மையாக வரி செலுத்தும் நடிகை" தனுஷ் பட நாயகிக்கு மத்திய அரசு விருது!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் படத்தில் நாயகியாக நடித்த நடிகைக்கு மத்திய அரசு நேர்மையாக வரி செலுத்திய நடிகை என்ற பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது.
தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’அசுரன்’ திரை படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் பிரபல மலையாள நடிகை ‘மஞ்சு வாரியர். தமிழில் முதன் முதலில் ’அசுரன்’ படத்தில் நடித்த அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே. மேலும் அஜீத் நடித்து வரும் ’அஜீத் 61’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாகவும் அவருடைய காட்சியின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் நேர்மையாக நரி செலுத்தும் பிரபலங்களை பாராட்டி சான்றிதழ் அளித்து வருகிறது. அந்த வகையில் நடிகை மஞ்சு வாரியருக்கு இந்த பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. 2021-22ஆம் ஆண்டிற்கான வரியை முறையாக கட்டியதால் அவருக்கு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருக்கு திரையுலகினர் பாராட்டு தெரிவித்து வந்தனர்.
மஞ்சு வாரியாரை அடுத்து மோகன்லால் நடித்த ’த்ரிஷ்யம்’ உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த மலையாள தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் என்பவருக்கும் இதே சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments