திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி: அதிரடி அறிவிப்பு

தமிழக அரசு நேற்று அறிவித்த ஊரடங்கு தளர்வில் தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை என்ற நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் 5வது கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அக்டோபர் 31 வரை நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு என்றாலும் அக்டோபர் 15ம் தேதிக்குப் பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து மாநிலங்கள் முடிவெடுக்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களின் ஒப்புதல் பெறவேண்டும்! எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசு திரையரங்குகளை 50% இருக்கைகளுடன் திறக்க அனுமதித்துள்ள நிலையில் மாநில அரசும் அதனை பின்பற்றி திரையரங்குகளை திறக்க வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகள் திறக்கப்பட்டால் விஜய்யின் ‘மாஸ்டர்’ உள்பட ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்கள் ஒவ்வொன்றாக திரையரங்குகளில் வெளியாகும் என்பதால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.