தமிழகத்தின் ஸ்டார் தொகுதி: மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் - வினோத் பி.செல்வம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போது வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 39 தொகுதிகள் இருந்தாலும் அவற்றில் சில தொகுதிகள் ஸ்டார் தொகுதி என கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒன்றுதான் மத்திய சென்னை தொகுதி.
மத்திய சென்னை தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்ற தயாநிதி மாறன் மீண்டும் திமுக சார்பில் போட்டியிடும் நிலையில் பாஜக சார்பில் வினோத் பி செல்வம் போட்டியிடுகிறார். மேலும் தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் கார்த்திகேயன் ஆகியோர் இந்த தொகுதியில் களமிறங்கியுள்ளனர்.
இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் வினோத் பி செல்வம் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் தற்போது அமைச்சராக இருக்கும் சேகர் பாபு சுமார் 59 ஆயிரம் ஓட்டு வாங்கிய நிலையில் வினோத் செல்வம் சுமார் 32,000 வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாஜகவுக்கு தற்போது வாக்கு சதவீதம் கூடி இருப்பதாக கூறப்படும் நிலையில் மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments