சரமாரியான கெட்ட வார்த்தை.. கத்தரி வைத்த சென்சார்.. 'கேப்டன் மில்லர்' ஃபைனல் ரன்னிங் டைம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் சற்று முன் வெளியாகி உள்ளன.
இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூஏ’ சான்றிதழ் அளித்துள்ள நிலையில் இந்த படத்தில் 14 இடங்களில் சென்சார் அதிகாரிகள் கத்தரி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பல கெட்ட வார்த்தை வசனங்களை சென்சார் அதிகாரிகள் கட் செய்துள்ளனர்.
வேலைக்கார நாய்கள் என்று இருந்த வசனத்தை நாய்கள் என்று மட்டும் மாற்றி உள்ளதாகவும் அதே போல் சாதாரணமாக பயன்படுத்த முடியாத கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் கட் செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
மொத்தத்தில் சென்சார் அதிகாரிகள் 4 நிமிடங்கள் 36 வினாடிகள் கொண்ட காட்சிகளை கட் செய்த நிலையில் இறுதியில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 37 நிமிடங்கள் என்று உருவாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான முந்தைய படங்களான ‘ராக்கி’ மற்றும் ‘சாணிக்காகிதம்’ ஆகிய படங்கள் சென்சாரில் ’ஏ’ சான்றிதழ் பெற்ற நிலையில் இந்த படம் மட்டுமே ’யூஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்துள்ளார். மேலும் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments