ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை சான்று அவசியம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
- IndiaGlitz, [Thursday,February 25 2021]
திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிட்டால் மட்டுமே தணிக்கை சான்றிதழ் என்ற விதிமுறை தற்போது இருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஓடிடியில் அதிக திரைப்படங்கள், வெப்தொடர்கள் வெளியாகி வருகின்றன. இவ்வாறு ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள், வெப்தொடர்களில் உச்சகட்ட வன்முறை காட்சிகளும் ஆபாச காட்சிகளும் இருப்பதால் அந்த படங்களுக்கும் தணிக்கை சான்றிதழ் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது ஓடிடி தளங்களுக்கும் தணிக்கைச் சான்றிதழ் அவசியம் என மத்திய அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. வன்முறை, ஆபாசம், மொழி, பாலினம் அடிப்படையில் ஓடிடி படங்களை மூன்று வகையாக வரையறுத்துள்ள மத்திய அரசு, 13 பிளஸ், 16 ப்ளஸ், மற்றும் ஏ என ஓடிடி திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழை சுயமாக குறிப்பிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் ஓடிடி தளங்களுக்காக திரைப்படங்கள் தயாரிக்கும் இயக்குனர், தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.