'புஷ்பா 2' படத்தின் 19 நிமிட காட்சிகளை நீக்கிய சென்சார் அதிகாரிகள்.. என்ன காரணம்?
- IndiaGlitz, [Saturday,December 07 2024]
அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2’ என்ற திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவான ’புஷ்பா 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் என்று இருந்த நிலையில், நீளமான ரன்னிங் டைம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது, இந்த படத்தின் முதல் நாள் வசூலில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 280 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சவுதி அரேபியா நாட்டில் மட்டும், இந்த படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில், கங்கம்மா ஜத்தாரா' என்ற குலதெய்வ வழிபாட்டுக்கான காட்சிகள் மட்டும் நீக்கப்பட்டு உள்ளதாகவும், அந்நாட்டில் மதம் மற்றும் கலாச்சார அடிப்படையில் இந்த காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளதாகவும், சவுதி அரேபியா சென்சார் தெரிவித்துள்ளது.
இதனால், உலகம் முழுவதும் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் ’புஷ்பா 2’ திரைப்படம், சவுதி அரேபியாவில் மட்டும் 3 மணி நேரம் 1 நிமிடம் மட்டுமே திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.