'மெர்சல்' விவகாரம்: எச்.ராஜாவுக்கு தணிக்கை அதிகாரி பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்த ஜிஎஸ்டி வரிக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் சமூக நல ஆர்வலர்களும் செய்த போராட்டம் கொடுக்காத விழிப்புணர்வை தளபதி விஜய்யின் ஒரே ஒரு திரைப்படம் மக்களுக்கு கொடுத்துவிட்டது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஆளும் பாஜகவினர் படத்திற்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றனர்.
தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தின் வசனத்தை நீக்குவது சரியா? என்றே அனனவரின் கேள்வியாக இருக்கும் நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று அளித்த ஒரு பேட்டியில், ''மெர்சல்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்டு உறுப்பினர்களை நீக்க வேண்டும்' என்று கூறினார்.
எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு பதில் கூறியுள்ள தணிக்கை வாரியம், 'மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்த வசனங்களில் எந்த தவறும் இல்லை என்றும் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை நீக்க கோருவது கருத்துரிமைக்கு எதிரானது என்றும் தணிக்கை வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com