'புலி'க்கு வரிவிலக்கு ஏன் இல்லை? அதிகாரிகள் கூறிய காரணங்கள்

  • IndiaGlitz, [Saturday,October 03 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு மறுக்கப்பட்டது. தமிழில் பெயர் வைக்கப்பட்டும், யூ' சர்டிபிகேட் பெற்றபோதிலும் இந்த படத்திற்கு வரிவிலக்கு ஏன் மறுக்கப்பட்டது என அனைவரின் மனதிலும் கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது இதற்கான காரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புலி' படத்தை பார்த்த ஆறு அதிகாரிகள், இந்த படம் கேளிக்கை விலக்கு அளிப்பதற்கு தகுதியானது அல்ல என பரிந்துரை செய்த காரணங்கள் கீழ்வருமாறு:

1. புலி திரைப்படத்தில் மூட நம்பிக்கைகளை உண்மையாக காட்டப்படும் காட்சிகள் தமிழ் பண்பாட்டிற்கு உகந்ததாக இல்லை.

2. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் உள்ளன.

3. பாடல் காட்சிகளில் மகளிரின் ஆடைகள் ஆபாச காட்சிகளாக சில இடங்களில் அமைந்துள்ளன

4. படத்தில் குழந்தையின் கழுத்து அறுபடுவது, சண்டைக்காட்சிகளில் வன்முறை, கொலைக்காட்சிகள் நேரிடையாக காட்சிபடுத்தப்பட்டுள்ளன

5. இரட்டை அர்த்த வசனங்கள், 12 வயது பெண் குழந்தை கழுத்து வெட்டப்படுவது போன்ற காட்சிகள் உள்ளன.

மேற்கண்ட காரணங்களால் 'புலி' படம் வரிவிலக்கு பெற தகுதியில்லை என அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.