திரையரங்கில் ரிலீஸ் செய்யுங்கள்: அனுஷ்கா பட தயாரிப்பாளருக்கு சென்சார் அதிகாரிகள் கூறிய அறிவுரை
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சினிமா சம்பந்தப்பட்ட எந்த பணியும் நடைபெறவில்லை. படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், புரமோஷன் பணிகள், சென்சார் பணிகள் உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறாததால் திரைத்துறையினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்
இந்த நிலையில் தற்போது இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் ஓரளவுக்கு தளர்வுகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது அனுஷ்கா ஷெட்டி நடித்த ’சைலன்ஸ்’ என்ற திரைப்படம் சென்சார் ஆகி சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் தயாராகியுள்ள ’சைலன்ஸ்’ திரைப்படம் மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு மொழி பதிப்புகள் மட்டும் சென்சார் ஆகியுள்ளது. சென்சார் அதிகாரிகள் தமிழ், தெலுங்கு மொழி ‘சைலன்ஸ்’ பதிப்பிற்கு ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் ‘சைலன்ஸ்’ திரைப்படம் ஒடிடி பிளாட்பார்மில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வந்த நிலையில் தற்போது சென்சார் ஆகியுள்ளதால் இந்த திரைப்படம் முதலில் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை இந்த படத்தின் இயக்குனரும் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து பாராட்டியதோடு இந்த படத்தை முதலில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யுங்கள் என்று அறிவுரை கூறியதாகவும் இயக்குனர் ஹேமந்த் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்
Both our films #nishabdham Telugu and #silence given U/A censor certificate and I am overwhelmed by the response of the #cencorboard panel members and my sincere thanks to them for there advice to release the film first in theatre ?? pic.twitter.com/bIZTOvjY7q
— Hemantmadhukar (@hemantmadhukar) May 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout