செல்போன் ஆப், விசாவை தொடர்ந்து இப்போ இதுவுமா… கெடுபிடி காட்டும் அமெரிக்கா!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவின் ஹீஸ்டன் மாகாணத்தில் இருக்கும் சீனத் தூதரகம் முன்பு நேற்று முன்தினம் இரவு சில முக்கிய ஆவணங்கள் எரிக்கப் பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதனால் ஏற்பட்ட தீயை அந்நாட்டுக் காவல் துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் அணைப்பது போன்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இச்சம்பவம் நடைபெற்ற சில மணிநேரத்தில் ஹீஸ்டன் நகரில் இருக்கும் சீனத் தூதரம், அமெரிக்காவில் உளவு வேலைப் பார்ப்பதாக அமெரிக்கா அரசு குற்றம் சாட்டத் தொடங்கியது. அதோடு 72 மணி நேரத்திற்குள் சீனத் தூதரகத்தை முற்றிலுமாக காலி செய்துவிட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருக்கும் உறவில் பெரும் விரிசல் ஏற்படும் என அரசியல் வட்டாரங்கள் கருத்துக் கூறத் தொடங்கி இருக்கின்றன. கொரோனா விவகாரத்தில் முளைத்த பிரச்சனை அடுத்து பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்து நிலைகளிலும் மாறிமாறி பெரும் முரணாக வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் சீன செயலிகள் தடை செய்யப்பட்டபோது தொடர்ந்து அமெரிக்காவில் இதேபோல தடை செய்வதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப் பட்டது. அடுத்து சீன-இந்திய எல்லை விவகாரத்தில் வெளிப்படையாக அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவு அளித்தது. அடுத்து தென் சீனக் கடல் பகுதியில் சீனாவிற்கு எதிரான நாடுகளோடு கைக்கோர்த்து தற்போது சீனாவை எச்சரிக்கும் வகையில் இராணுவ ஒத்திகையிலும் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.
முன்னதாக அமெரிக்காவில் சீனாவின் உயர் மட்ட கம்யூனிச அதிகாரிகளுக்கு விசா மறுக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. சீனாவின் HUwai தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டதோடு 5G ஆய்வினையும் அமெரிக்காவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. தற்போது அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகத்தையும் காலி செய்யுமாறு அமெரிக்கா வலியுறுத்தி இருக்கிறது. இதனால் இருநாடுகளின் பகை இன்னும் வலுவாகிக் கொண்டே வருவதாகப் பரபரப்பு கிளம்பியிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments