ஜோ பிடன் நியமித்த ஆலோசனைக் குழுவில் ஈரோட்டு பெண்!!! மகிழ்ச்சியில் தத்தளிக்கும் கிராமம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜனாநயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அமெரிக்காவின் அடுத்த அதிபர் பதவிக்கு தேர்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் டிரம்ப் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் சட்டப் போராட்டத்தை நடத்தப் போவதாகச் செய்தியாளர்களிடம் கூறிவருகிறார். ஆனால் டிரம்ப்பின் நடவடிக்கைக்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் ஜனநயாகக் கட்சியினர் தொடர்ந்து அமைதிக் காத்தே வருகின்றனர். இந்நிலையில் ஜோ பிடன் அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் முதலில் கொரோனா வைரஸை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள ஒரு ஆலோசனைக் குழுவையும் ஜோ பிடன் நியமித்து இருக்கிறார். அந்த ஆலோசனைக் குழுவில் ஈரோட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண் டாக்டர் இடம்பிடித்து உள்ளார். இதனால் இந்தியாவிற்கு மட்டும் அல்ல அவர் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மாவட்டம் பெருமாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜ். இவரின் மகள் டாக்டர் செலின் ராணி கவுண்டர் அமெரிக்காவில் தங்கி பல வருடங்களாக மருத்துவப் பணியாற்றி வருகிறார். அந்நாட்டின் காசநோய் தடுப்பு பிரிவின் இணை இயக்குநராகவும் டாக்டர் செலின் ராணி பங்காற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது ஜோ பிடன் ஏற்படுத்தி இருக்கும் கொரோனா தடுப்பு ஆலோசனைக் குழுவில் டாக்டர் செலின் ராணி கவுண்டர் இடம் பிடித்து இருப்பது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அமெரிக்காவில் பணியாற்றத் தொடங்கியதில் இருந்து டாக்டர் செலின் ராணி கவுண்டர் 4 முறை ஈரோட்டு வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழுவில் ஒரு இந்தியப் பெண்மணி, அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி இடம் பிடித்து இருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com