பாகிஸ்தானிடம் சிக்கிய அபிநந்தனை மீட்க திரை பிரபலங்களின் குரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய, பாகிஸ்தான் நாடுகளிடையே கடந்த சில நாட்களாக போர்மேகம் சூழ்ந்துள்ள நிலையில் நேற்று சென்னையை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கியுள்ளார். அபிநந்தனை அந்நாட்டு கும்பல் சரமாரியாக தாக்க, அவரை பாகிஸ்தான் ராணுவம் அவர்களிடம் இருந்து மீட்டு, கைது செய்து அழைத்து சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த நிலையில் அபிநந்தனை பாகிஸ்தானில் இருந்து மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என திரையுலக பிரபலங்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
கமல்ஹாசன்: இந்திய வீரர் அபிநந்தனின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறிய கமல்ஹாசன், அபிநந்தன் நிச்சயம் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையை அளித்தார்.
விஜயகாந்த்: நமது விமான படை வீரர் அபிநந்தன் அவர்களை பத்திரமாக மீட்க, மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சூர்யா: நமது வீரர் அபிநந்தனின் துணிச்சலுக்கு சல்யூட். மன உறுதியுடன் இருங்கள். இந்த நாடே உங்களுக்கு ஆதரவாக உள்ளது. எங்கள் பிரார்த்தனை நிச்சயம் உங்களை இந்தியாவுக்கு வரவழைக்கும்.
கஸ்தூரி: அபிநந்தனின் குடும்பத்தினர்களுக்கு தற்போது நாடே உறுதுணையாக உள்ளது. அவருடைய பாதுகாப்பிற்கு நாம் பிரார்த்தனை செய்வோம்.
நடிகை இவானா: பாகிஸ்தான் கும்பலில் இருந்து அபிநந்தனை மீட்ட பாகிஸ்தான் ராணுவத்திற்கு நன்றி. நம் வீரரின் துணிச்சலுக்காக பெருமை அடைகிறேன்.
இந்த நிலையில் அபிநந்தனை மீட்பது குறித்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி நேற்று இருமுறை ஆலோசனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Iniya Vaishnavi
Contact at support@indiaglitz.com