சிசிஎல் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தடையா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Sunday,January 24 2016]

சிசிஎல் என்னும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி கடந்த சில ஆண்டுகளாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு இணையாக இந்த போட்டிகளுக்கும் வரவேற்பு இருந்து வருவதால் தொலைக்காட்சியில் இந்த போட்டிகள் நேரடி ஒளிபரப்பும் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சிசிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் இரண்டு பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் இணைந்து சிசிஎல் போட்டிகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளன. அவர்கள் தாக்கல் செய்த மனுவில் "'கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கான ஸ்பான்சர் நிறுவனமாக கார்பன் மொபைல் நிறுவனம் செயல்பட்டது. இந்த போட்டியை ஒளிபரப்பு செய்ததற்காக நாங்கள் கொடுத்த தொகையை இன்னும் எங்களுக்கு வழங்கவில்லை. எனவே, தற்போது ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் நீதிபதி மணிகுமார், 'நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்க முடியாது. மேலும், பணம் தொடர்பான பிரச்னை குறித்து பேச்சு வார்த்தை நடத்த ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி மோகன்ராம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்பு இருதரப்பினரும் ஆஜராகி சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்'' என உத்தரவு பிறப்பித்தார்.