தல தோனி முதல் சிம்பு, சிவகார்த்திகேயன் வரை பலரையும் கவர்ந்த டீ-ஷர்ட்… என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபகாலமாக இந்தியப் பிரபலங்கள் பலரும் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் டீ-ஷர்ட் ஒன்றை அணிந்துகொண்டு வருவதைப் பார்த்த ரசிகர்கள் அதுகுறித்து அலசத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த டீ-ஷர்ட் பற்றிய தகவல்கள் தற்போது சோஷியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
பாரிஸைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் Balmain எனும் பிராண்ட் டீ-ஷர்ட்தான் தற்போது இந்தியப் பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இருக்கிறது. கருப்பு நிறத்தில் இருக்கும் இந்த பிராண்ட் டீ-ஷர்ட்டை பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் இருவரும் பொது இடங்களில் அணிந்துகொண்டு வந்துள்ளனர். அதேபோல பாலிவுட் குயின் நடிகை எனக் கொண்டாடப்பட்டு வரும் நடிகை ஜாக்குலினும் சமீபத்தில் பால்மின் பிராண்ட் ஸ்லீவ்லஸ் டீ-ஷர்ட்டை அணிந்து வந்துள்ளார்.
அதேபோல சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியும் இந்த பிராண்ட் டீ-ஷர்டை விரும்பி அணிந்திருக்கிறார். இந்த வரிசையில் டோலிவுட ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் கோலிவுட் நடிகர்களான தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் எனப் பலரும் இணைந்துள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்கள் Balmain பற்றிய விவரங்களை அலசி வருகின்றனர்.
இதையடுத்து பாரீஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் Balmain தயாரிப்பு நிறுவனம் பிரபலங்களுக்கு என்றே பிரத்யேகமாக அவர்கள் விரும்பும் வகையில் கருப்புநிறத்தில் டீ-ஷர்ட்டை தயாரித்து விற்பனை செய்துவருவது தெரியவந்துள்ளது. மேலும் இதன் விலை 22 ஆயிரத்தில் துவங்கி 45 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறதாம். ஆடைகளைத் தவிர இந்த நிறுவனம் பிரபலங்களுக்கான ஷு, லெதர் பைகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் இந்தியப் பிரபலங்கள் Balmain டீ-ஷர்ட்டுக்கு மாறி பொதுஇடங்களில் உலா வந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout