தோத்தாலும் நம்ம தல எப்போதுமே தோனி தான்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை இன்னும் நம்ப முடியவில்லை. 18 அல்லது 19 ஓவர்களில் சென்னை அணி வெற்றிக்கனியை பறித்துவிடும் என்று தான் ஆரம்பத்தில் தெரிந்ததே. ஆனால் திடீரென போட்டி மும்பை பக்கம் திரும்பியது இன்னும் நம்ப முடியாத மர்மமாகவே உள்ளது.

இந்த நிலையில் நேற்றைய போட்டி குறித்து திரையுலக பிரபலங்கள் கூறிய கருத்துக்களை பார்ப்போம்.

நடிகை ராய்லட்சுமி: என்ன ஒரு மேட்ச். வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் மும்பை இந்தியன்ஸ். சிஎஸ்கே நன்றாக விளையாடி மும்பைக்கு நெருக்கடி கொடுத்தனர். சிறந்த இறுதிப் போட்டியைக் கொடுத்ததற்காக இரண்டு அணிகளுக்கும் வாழ்த்துகள்.

இயக்குனர் அறிவழகன்: அட்டகாசமான சிக்ஸ் உடன் ஷேன் வாட்ஸன் சிறப்பாக ஆடினார். எதற்காக தோனியின் ரன் அவுட்டில் இந்த சர்ச்சைக்குரிய முடிவு? தோற்றாலும் எப்போதும் நீங்கள்தான் சிஎஸ்கே

நடிகர் சித்தார்த்: என்ன ஒரு இறுதி ஆட்டம். நன்றாக ஆடினீர்கள் மும்பை இந்தியன்ஸ். எந்த ஒரு இறுதிப் போட்டியும் இந்த அளவுக்கு நூலிழையில் சென்றிருக்காது. இந்த மேட்ச் எப்படி மாறியது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. ஒரே அணியிடம் 4 முறை தோற்பது என்பது கீழ்படிதலின் சிறந்த சாட்சி.

நடிகர் விஷ்ணு விஷால்: என்ன ஒரு ஆட்டம். ஒரு ரோலர் கோஸ்டர் போல் இருந்தது. சிஎஸ்கேவுக்கு அதிர்ஷ்டம் இல்லை. மலிங்காவின் கடைசி ஓவர் சிறப்பாக இருந்தது. ஆனால் எங்கேயோ ஆட்டத்தை விட்டுவிட்டோம். வாழ்த்துக்கள் மும்பை இந்தியன்ஸ்.

நடிகை ரூபா மஞ்சரி: சிங்கத்தின் சண்டைபோல் இருந்தது இறுதி ஆட்டம். சிஎஸ்கே வழக்கம்போல மீண்டு வரும். அடுத்த ஆண்டு வெற்றிக் கோப்பை நம்முடையது. ஷேன் வாட்ஸனுக்கு பாராட்டுகள். வாழ்த்துக்கள் மும்பை இந்தியன்ஸ். எப்போதும் நம்ம தல தோனி தான்.

நடிகர் அபிஷேக்பச்சன்: மும்பை வெற்றியடைந்துவிட்டது. வாழ்த்துகள் மும்பை இந்தியன்ஸ். நன்றாக முயற்சி செய்தீர்கள் சிஎஸ்கே.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்: தோனி நாட் அவுட். தவறான அம்பயரிங். சென்னை அணி நன்றாக விளையாடியது. சிஎஸ்கே ரசிகர் என்பதில் பெருமை. தோனிக்கும், சிஎஸ்கே அணிக்கும் தலைவணங்குகிறேன். நாங்கள் உங்களை எப்போதும் நேசிக்கிறோம். நேசிப்போம். வாழ்த்துக்கள் மும்பை இந்தியன்ஸ்.

இயக்குனர் வெங்கட் பிரபு: சிறந்த ஐபிஎல் இறுதிபோட்டிகளில் ஒன்று. நன்றாக விளையாடினீர்கள் மும்பை இந்தியன்ஸ். இப்படிக்கு தீவிர சிஎஸ்கே ரசிகன்.
 

More News

மணமகள் இல்லாமல் ஒரு திருமணம்: ஒரு தந்தையின் நெகிழ்ச்சி முடிவு!

மன வளர்ச்சி குன்றிய மகனுக்கு அவரது தந்தை மணமகளே இல்லாமல் திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் குஜராத்தில் நடைபெற்றுள்ளது

தோனி அவுட் இல்லை: வைரலாகும் சிறுவனின் கதறி அழும் வீடியோ

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இளையராஜாவுக்கு உதவி செய்ய அரசு தயார்: புதுவை முதல்வர் அறிவிப்பு

இசைஞானி இளையராஜா 1000 பாடல்களுக்கும் மேல் கம்போஸ் செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ள நிலையில் இசைக்காக அவர் மேலும் பல புதிய திட்டங்களை வைத்துள்ளார்.

ஐபிஎல் 2019: மொத்த பரிசுத்தொகை ரூ.50 கோடி, யார் யாருக்கு எவ்வளவு?

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்றிரவுடன் முடிவுக்கு வந்தது. இறுதி போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய நிலையில்

'தளபதி 64' படத்தின் இயக்குனர் பட்டியலில் இளம் இயக்குனர்!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும்,