ஓவியாவுக்கு குவியும் நட்சத்திரங்களின் ஆதரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ஓவியா, 'களவாணி' படத்தில் அறிமுகமாகி பத்து படங்களுக்கும் மேல் நடித்திருந்தாலும் கடந்த 7 ஆண்டுகளில் பெறாத புகழை இந்த ஒரே மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெற்றுவிட்டார். அவர் பிக்பாஸ் பட்டத்துடன் வெளியே வந்தவுடன் நயன்தாரா, த்ரிஷா அளவிற்கு பெரிய ஸ்டார் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த நிலையில் பொதுமக்கள், நெட்டிசன்கள் மட்டுமின்றி தற்போது திரையுலக பிரபலங்களும் ஓவியாவுக்கு தங்கள் ஆதரவை சமூக இணையதளங்கள் மூலம் கொடுத்து வருகின்றனர்.
ஓவியா குறித்து சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'ஒருவர் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக இருந்தால், அவர்களை அவர்களின் போக்கில் தனியாக விட்டுவிட வேண்டும். அதை விட்டுவிட்டு அவரை குறை கூறுவதோ, கார்னர் செய்வதோ கூடாது' என்று ஆதரவு கொடுத்துள்ளார்,.
நடிகர் சதீஷ் சில தினங்களுக்கு முன்பே 'ஓவியா தான் பிக்பாஸ் வின்னர்' என்று ஏற்கனவே தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நகைச்சுவை நடிகர் கருணாகரன் 'பிக்பாஸ், ஓவியாவை காப்பாற்றுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரோபோ சங்கர் ஒருமணி நேரத்திற்கு ஒரு டுவீட்டை ஓவியாவுக்கு ஆதரவாக பதிவு செய்து கொண்டிருக்கின்றார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நிச்சயம் ஓவியாதான் வெற்றி பெறுவார் என்றும் ஜூலிக்கு ஆஸ்கார் விருது கொடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோல் இன்னும் பல கோலிவுட் நட்சத்திரங்கள் ஓவியாவுக்கு தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆதரவு கிடைத்துவருவதால் ஓவியாவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றே தோன்றுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com