திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0'

  • IndiaGlitz, [Thursday,November 29 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பின் ரஜினி ரசிகர்களுக்கு செம விருந்தாக இந்த படம் அமைந்துள்ளதாக பாராட்டை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த கோலிவுட் திரையுலக பிரபலங்கள் கூறிய கருத்தை தற்போது பார்க்கலாம்

இயக்குனர் பாண்டிராஜ்: ஒரு உண்மையான பிரமாண்ட படம் வந்துவிட்டது. நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் படம் 2.0. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்: 2.0 வெறித்தனமான தலைவர் படம். ஒவ்வொரு காட்சியிலும் அனல் பறக்கின்றது. இந்திய சினிமாவின் தலைசிறந்த படத்தை கொடுத்த இயக்குனர் ஷங்கர் மற்றும் அவரது டீமுக்கு வாழ்த்துக்கள். அனைவரும் போற்றும் ஒரு படம்

நடிகர் கார்த்தி: இதைவிட சிறந்த படம் இல்லை என்ற அளவுக்கு மிகப்பெரிய அந்தஸ்தை கொண்ட படம். வாழ்த்துக்கள்

இயக்குனர் ரஞ்சித்: 2.0 திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்று வருவது குறித்து ரொம்ப மகிழ்ச்சி. ஷங்கர் மற்றும் அவரது டீமுக்கு வாழ்த்துக்கள்

நடிகை நீதுசந்திரா: தமிழ் சினிமா ரசிகர்களின் அன்பு மிகப்பெரியது. ரஜினி அவர்களின் மிகப்பெரிய ரசிகைகளில் நானும் ஒருவர். மும்பையில் அதிகாலை 5 மணி காட்சி பார்த்தேன்

இயக்குனர் கே.வி.ஆனந்த்: புதுவை ரத்னா தியேட்டர் முன் '2.0' படத்தை பார்க்க காத்திருக்கின்றேன். ஷங்கர் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்

நடிகர் பிரேம்ஜி: ஐ லவ் யூ தலைவா!!!

'2.0' திரைவிமர்சனம்

 

More News

'தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்' முதல் நாள் சாதனையை '2.0 முறியடிக்குமா?

இந்தியாவில் இதுவரை முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக 'தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்' சாதனை புரிந்துள்ளது. இந்த படம் முதல் நாளில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது

தற்கொலை செய்து கொண்ட ஃபேஸ்புக் காதல் ஜோடி: உருக்கமான கடிதம்

ஃபேஸ்புக்கில் பழகி காதலித்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோடு அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி 63: இன்று முதல் தொடங்கிய முக்கிய பணி

தளபதி விஜய் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தளபதி 63' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது என்பது தெரிந்ததே.

மன்னிப்பு கேட்க முடியாது, உத்தரவாதமும் தரமுடியாது: ஏ.ஆர்.முருகதாஸின் தைரியமான முடிவு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' படத்தில் அரசின் விளம்பர பொருட்களை விமர்சிக்கும் வகையில் காட்சி இருந்ததால் அந்த காட்சிகளுக்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

என்னை பாஜகவில் இருந்து நீக்க தமிழிசைக்கு உரிமையில்லை: காயத்ரி ரகுராம்

சமீபத்தில் நடிகை காயத்ரி ரகுராம் போதையில் கார் ஓட்டியதாக சர்ச்சை எழுந்தது. இதற்கான விளக்கத்தை காயத்ரி தெளிவாக கூறிவிட்டபோதிலும் தொடர்ந்து இதுகுறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவி வருகிறது.