'பாகுபலி'யை பாராட்டிய பிரபலங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள 'பாகுபலி' திரைப்படம் இன்று ரிலீசாகி விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் எஸ்.எஸ்.ராஜமவுலியின் பிரமாண்ட முயற்சிக்கும், பாகுபலி' படக்குழுவினர்களுக்கும் பிரபல திரை நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தனுஷ்: பாகுபலி படக்குழுவினர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த படம் மிகப்பெரிய ஹிட்டாக நான் இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
நடிகை லட்சுமி மஞ்சு: பாகுபலி' ஒரு விஷுவல் ட்ரீட். கண்டிப்பாக இந்த படத்தை ஒவ்வொருவரும் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும். இந்த படத்தை நானே தயாரித்ததுபோல் மகிழ்ச்சி அடைகிறேன்
சிவகார்த்திகேயன்: பாகுபலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைய படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.
தேவிஸ்ரீபிரசாத்: இன்று பாகுபலி' தினம். பிரபாஸ் மற்றும் பாகுபலி படக்குழுவினர் பெறப்போகும் வெற்றியை இதற்கு முன்னர் எவரும் பெற்றதில்லை என்ற செய்தி விரைவில் வரும்
கரண் ஜோஹர்: இந்திய இயக்குனர்களை தலைநிமிர வைத்துள்ளார். இந்த படத்தை இந்தியில் வெளியிடுவதில் பெருமை அடைகின்றேன்.
செல்வராகவன்: என்னுடைய நெருங்கிய நண்பர்களான ராணா மற்றும் அனுஷ்கா ஆகியோர்களுக்கும் படக்குழுவினர்களுக்கும் எனது வாழ்த்து. கண்டிப்பாக பாகுபலி மிகப்பெரிய வெற்றியை பெறும்
டாப்சி: இன்றைய பொழுது பாகுபலி'யில் இருந்து ஆரம்பித்துள்ளது. எங்கும் பாகுபலி எதிலும் பாகுபலி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments