சமூக ஊடகத்தில் பெண்ணியம் குறித்து தனது கருத்தைப் பேசிய சில பிரபலங்கள்.
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்றைய வளர்ந்து வரும் உலகில் குறிப்பாக நமது சமுதாயத்தில் எத்தனையோ வரையறைகள் கட்டுப்பாடுகள் நிலவுகின்றன அதே சமயத்தில் திணிக்கவும் படுகின்றன,இன்றும் பெண்ணியம் என்பதற்கு சரியான விளக்கம் நிறைய பேருக்கு தெரிவதில்லை.அதை பற்றி சிறிது தெளிவாகவும் விரிவாகவும் காண்போம் .
பெண்ணியம் பற்றி நடிகை அம்மு அபிராமி கூறியதாவது,
ஒவொருவருக்கும் பெண்ணியம் பற்றி வெல்வேறு விதமான புரிதல் இருக்கும்,அது போல் எனக்கு பெண்ணியம் என்பதே ஆண்களுக்கானது என்று நினைக்கிறன்.ஏனென்றால் ஆண்கள் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் அதற்காக முன் நிற்க வேண்டும் பெண்களுக்கானது மட்டுமே பெண்ணியம் இல்லை என்று நினைக்கிறன்.
பாடகி சின்மயி அவர்கள் பெண்ணியம் பற்றி பேசியது:
பெண்ணியம் என்பது சமத்துவம் பாதுகாப்பு,தனி மனித மரியாதை மற்றும் உரிமை.இது தான் பெண்ணியம் என்று நினைக்கிறன்.ஆனால் நிறைய பெண்களே பெண்ணியம் என்ற வார்த்தையை தவறாக புரிந்து கொள்கிறார்கள்.ஒரு பெண்ணுக்கு நடக்க கூடிய அநீதியை ஒரு ஆண் தட்டி கேட்பதும் பெண்ணியம் தான்.சரியான சிந்தையுடன் பெண்ணியத்தை கையாண்டால் அனைவர்க்கும் கிடைக்க வேண்டிய உரிமை நிச்சயம் கிடைக்கும்.
பெண்ணியம் பற்றி அபிராமி வெங்கடாச்சலம் கூறியதாவது,
பெண்ணியம் என்பது ஒரு அரசியல் ,மேலும் அதை பற்றி நாம் பேச கூடாது.ஆனால் நான் ஆண் பெண் சமத்துவத்தை நம்புகிறேன்.இங்கு ஆணுக்காகவும் பேச வேண்டிய பிரச்சனைகள் இருக்கு மற்றும் பெண்ணுக்காகவும் பேச வேண்டிய பிரச்சனைகள் இருக்கு.மேலும் இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் எல்லோருமே உரிமையை பற்றி வேண்டுமானால் பேசலாம் ஆனால் பெண்ணியத்தை பற்றி மட்டுமே பேச வேண்டிய அவசியம் இல்லை.
தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் நடிகை ஆனந்தி அவர்கள் பெண்ணியம் பற்றி பேசியது:
இங்கு பெண்ணியம் என்பதற்கான புரிதல் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.பெண்ணியம் என்ற வார்த்தையே கெட்ட வார்த்தை போல் உருவாக்கி விட்டனர்.என்னை பெண்ணியவாதி என்று கூறினால்,நான் எல்லா இடங்களிலும் அதற்காக குரல் கொடுத்தேனா என்று கேட்டால் இல்லை.ஆனால் எனக்கு பெண்ணியம் சார்ந்த எண்ணங்கள் இருக்கா என்று கேட்டால் கண்டிப்பாக எனக்கு மட்டும் இல்லை எல்லா பெண்களுக்கும் உண்டு.உண்மையில் ஆண்களுக்கும் உண்டு.மேலும் பெண்ணியம் என்பது ஒரு ஆணை கீழே தள்ளுவது அல்ல.அது ஆண்களுக்கு எதிரானதும் அல்ல.எனக்கு தப்பு சரி என தோன்றியதை நான் பேசுகிறேன்.அதை அரசியலாகவோ,பெண்ணியமாகவோ,சமத்துவமாகவோ,உரிமை குரலாகவோ அது பார்ப்பவர்களை பொருத்தது.
நடிகை ஊர்வசி பெண்ணியம் பற்றி பேசியது:
நாம் என்ன நம்புகிறோமோ அது தான் பெண்ணியம்.ஒரு பெண்ணிற்கு ஒரு ஆணுடைய ஊக்கம் பாதுகாப்பு அவரால் கிடைக்க கூடிய தைரியம் மிக முக்கியம்.எனவே என்னை பொறுத்தவரை பெண்ணியம் என்பது ஆண் பெண் இருவரையும் சார்ந்தது ஆகும்.
பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் பற்றி பேசியது:
பெண்ணியம் என்ற வார்த்தையின் அர்த்தங்களை எல்லோரும் புரிந்து கொண்டால் இங்கு பெண்களுக்கு எதிராக நடக்க கூடிய பல வன்முறைகளை தடுக்கலாம்.பெண்களுக்கான பெண்கள் சார்ந்த பல அமைப்புகள் உள்ளன.ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக குரல் எழுப்புவதும் பெண்ணியம் தான்.பெண்களை ஊக்குவித்து ஆண்களிடம் இருந்து இன்னும் சத்தமான குரல் ஒலித்தால் சந்தோசம்.யாருக்கு கீழும் யாரும் இல்லை என்பதை உணர்த்துவதே பெண்ணியம் ஆகும்.
வழக்கறிஞர் மதிவதனி பெண்ணியம் பற்றி பேசியது,
பெண்ணை எப்போதும் நுகர்வு பொருளாக பாலியல் பண்டமாக மட்டுமே பார்க்கும் ஒரு சிலரை நோக்கி எழுப்பும் குரலே என்னை பொறுத்தவரை பெண்ணியம்.பெண்கள் அவர்களுக்கு தோன்றிய நிகழ்வை வெளிப்படையாக சொல்ல சமுதாயம் இடம் கொடுக்க வேண்டும்.தனக்கான பிரச்சினைக்காக நாம் குரல் எழுப்புவோமானால் நாமே பெண்ணியவாதி.பெண்கள் பெண்களிடத்தில் பேசுவதை காட்டிலும் இதை ஆண்களிடமே பேச வேண்டும்.
நடிகை சுவேதா பெண்ணியம் பற்றி பேசியது:
பெண்ணியம் சமநிலை மட்டுமே.அதை பயன்படுத்தி அதன் பேரால் ஆணவம் அதிகாரம் திமிரை காட்ட கூடாது என்று நினைக்கிறேன்.பெண்ணியம் பேசினால் பெண் தான் மேல்,அதெல்லாம் இல்லை இங்கு எல்லோருமே சமம் தான்.அந்த பெண்ணை சார்ந்த படத்தில் எனக்கு கனா படம் மிகவும் பிடிக்கும். எல்லோரும் சமமாக நினைத்து எல்லோரும் வெற்றி காண்போம்.
அரசியல்வாதி நாச்சியாள் சுகந்தி பெண்ணியம் பற்றி பேசியது:
ஆணை போல் இருப்பது பெண்ணியமா ? என்ற சிந்தனையை இந்த சமுதாயம் விதைத்து வைத்துள்ளது.பெண்ணிய உரிமையை அறிமுகப்படுத்தியதே பெரியார் தான். சுயமரியாதை மற்றும் உரிமைக்காக பேசுவதே பெண்ணியம் அவர்களே பெண்ணியவாதி.
எழுத்தாளர் கொற்றவை அவர்கள் பெண்ணியம் பற்றி பேசியது:
பெண்ணியம் என்பது பெண் நோக்கில் இருந்து பெண்களின் பிரச்சினைகளை பற்றி பேசுவது ஆகும்.சாதியை பற்றி பேசும்போது சாதியல் கல்வி என்கிறோம்.அதே போல் மகளிர் குறித்து பேசுவதை மகளிரியல் அல்லது பெண்ணியம் என கூறலாம்.சமுதாயத்தில் அனைவரும் ஒரே நிலையில் இல்லை என்பதே யதார்த்தம்.அதற்காக குரல் எழுப்பி நீதி அமைப்பதே இங்கு பெண்ணியம்.அந்த வகையில் நானும் ஒரு பெண்ணியவாதியே.
எழுத்தாளர் லதா அவர்கள் பெண்ணியம் பற்றி பேசியது:
இது தான் உனக்கான வாழ்க்கை இதை தான் நீ வாழ வேண்டும் என்று கட்டமைப்புக்கு திணிப்புக்கு எதிராக குரலை எழுப்புவோமானால் அதுவே பெண்ணியம் .ஒரு பெண்ணின் உரிமைக்காக ஒரு ஆணும் சேர்ந்து குரல் எழுப்பினால் அது அதை விட சிறப்பு.எல்லோரும் சமம் என்பதை உணர்த்த போராடுவதே இங்கு பெண்ணியவாதி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com
Comments