close
Choose your channels

இன்று விஜயகாந்துக்கு மறக்க முடியாத கொண்டாட்டமான நாள்

Thursday, January 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேப்டன் விஜயகாந்த் உடல்நல சிகிச்சைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா சென்றாலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம் என ஒவ்வொரு முக்கியமான நாட்களுக்கும் வாழ்த்து கூற அவர் மறந்ததில்லை. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோதிலும் அவருடைய மனம் முழுமையாக தமிழகத்தை சுற்றியே உள்ளது என்பதையே இது காண்பிக்கின்றது.

இந்த நிலையில் விஜயகாந்த் இன்று தனது திருமண நாளை மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்காவில் கேக் வெட்டி கொண்டாடினார். இன்றைய மறக்க முடியாத விஜயகாந்த்-பிரேமலதா திருமண நாள் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து, முழுமையாக குணமாகி மீண்டும் கம்பீரக்குரலில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அவருடைய ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரசிகர்களின், தொண்டர்களின் ஆசையை அவர் விரைவில் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment