வடமாநிலங்களில் களைக்கட்டும் சாத்பூஜை… எதற்கு இந்த கொண்டாட்டம் தெரியுமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வடமாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகை சாத்பூஜை. இந்தப் பண்டிகையை 4 நாட்கள் கொண்டாடுகின்றனர். கடந்த புதன்கிழமை துவங்கிய இந்தப் பண்டியைக்கு பிரதமர் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
பண்டிகையின் இறுதிநாளான இன்று அதிகாலை சூரியனுக்கு பெரும்பாலான மக்கள் படையலிட்டு வழிபாடு நடத்தினர். இந்திப் பேசும் மாநிலங்களான உத்திரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்தப் பண்டிகை விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தியாவை ஒட்டியுள்ள நேபாளத்திலும் சாத்பூஜை மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது.
ஒவ்வொரு அறுடை காலத்திலும் விவசாயிகள் சூரியனுக்கு படையல் இடுவர். அதுபோன்ற ஒரு படையலைத்தான் சாத்பூஜை என்று வடமாநில மக்கள் கொண்டாடுகின்றனர். கொரோனாவிற்கு நடுவிலும் பல வடமாநிலங்களில் இந்தப் பண்டிகை விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments