பிரபல இசையமைப்பாளரின் இசையில் 'கோவை ஆன்ந்தம்'

  • IndiaGlitz, [Monday,October 30 2017]

சென்னையின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் அனிருத்தின் 'சான்ஸே இல்லை' என்பது உள்பட பல தனிப்பாடல்கள் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னையை அடுத்து தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெருமையை கொண்ட கோவை நகரின் 'கோவை ஆன்ந்தம்' என்ற தனிப்பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.

பிரபல கோலிவுட் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹிப்ஹாப் தமிழா ஆதி 'கோவை ஆன்ந்தம்' என்ற பாடலை தயார் செய்து வருகிறார். இந்த பாடல் கோவை மக்களின் பெருமையை கூறும் வகையில் இருக்கும் என்பதால் கோவை மக்கள் உள்பட அனைவரும் இந்த பாடலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

கோவை மண்ணின் பெருமைகளை கோவை மண்ணின் மைந்தன் ஹிப்ஹாப் தமிழா ஆதி கம்போஸ் செய்து பாடவுள்ளதால் இந்த பாடல் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு கொசுறு செய்தி என்னவெனில் தளபதி 62 படத்திற்கு இசையமைக்க ஹிப்ஹாப் தமிழா ஆதியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மையெனில் விஜய் ரசிகர்களுக்கு மற்றொரு இசை விருந்து காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மகேஷ்பாபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்த 'ஸ்பைடர்' சமீபத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

மெர்சலின் சென்னை வசூல்: ரூ.10 கோடி கிளப்பில் இணைந்தது

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் ஏற்கனவே நல்ல ஓப்பனிங் வசூலை கொடுத்த நிலையில் பாஜக தலைவர்களின் புண்ணியத்தில் 3வது வாரத்திலும் நல்ல வசூலை பெற்று வருகிறது.

இந்திய பிரதமர் மோடியா? மன்மோகன் சிங்கா? அமைச்சரின் உளறல்

கடந்த சில மாதங்களாகவே அதிமுக அமைச்சர்கள் வாய்தவறி உளறிவருவது தொடர்கதையாகி வருகிறது.

ஹார்வர்டு பல்கலை தமிழ் இருக்கைக்கு விஷால் செய்த உதவி

உலகில் உள்ள ஏழு செம்மொழிகளில் தமிழுக்கு மட்டுமே ஹார்வர்டு பல்கலையில் இருக்கை இல்லை என்பது உலக தமிழர்களின் குறையாக இருந்த நிலையில் தற்போது இந்த இருக்கையை பெற உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆர்வலர்கள்

ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை: ஏ.ஆர்.ரஹ்மான் செய்த மகத்தான உதவி

உலகின் ஏழு செம்மொழிகளில் ஒன்றான தமிழுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை பெற உலகெங்கும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.