கொரோனாவைவிட நிபா வைரஸ் கொடியது… சிடிசி ஏன் எச்சரிக்கிறது?
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமானது (CTC) கொரோனாவை விட நிபா வைரஸ் அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. மேலும் இது உலகளாவிய நோய்த்தொற்றாக மாறுவதற்கு உரிய அனைத்து பண்புகளையும் கொண்டிருக்கிறது என கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
கேரளாவில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் தாக்கத்தால் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் அச்சிறுவனுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான பேரை தற்போது சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் நெருக்கமான தொடர்புகளின் மாதிரிகள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
இந்த நிபா வைரஸ் தாக்கத்தால் ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டில் கோழிக்கோடு பகுதியில் 17 பேர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். மேலும் கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் இப்படியொரு பாதிப்பா? என மக்களும் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் சிடிசி நிபா வைரஸ் உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனத் தெரிவித்து இருக்கிறது. மேலும் நிபா வைரஸ் பாதிப்பிற்கு தடுப்பு மருந்துகள் இல்லாததால் ஆரம்பக் கட்டத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சிடிசி வலியுறுத்தி உள்ளது.
நிபா வைரஸின் அறிகுறிகளை ஆரம்பக்கட்டத்தில் கண்டறிவது சவாலான விஷயமாக இருக்கலாம். ஆனால் இப்படி செய்வதன் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments