செக்க சிவந்த வானம்: சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

  • IndiaGlitz, [Tuesday,September 18 2018]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண்விஜய் என நான்கு ஹீரோக்கள் முக்கிய வேடத்தில் நடித்த 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் வரும் 27ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது

இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 143 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஓடும் வகையில் உள்ளது. ஒரு ஆக்சன் படத்திற்கு உரிய சரியான நீளத்தில் படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அதிதிராவ் ஹைதி, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளன.

More News

பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அஜித்-விஜய் நாயகி

பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று தனது 68வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி உலக தலைவர்களும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜோதிகாவின் 'காற்றின் மொழி' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த ராதாமோகன் இயக்கிய 'காற்றின் மொழி' திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி வெளிவரும் என்ற வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

பிரபல வில்லன் நடிகர் கேப்டன் ராஜூ காலமானார்.

பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு இன்று கேரளாவில் காலமானார். அவருக்கு வயது 68. சிவாஜிகணேசன், சத்யராஜ் நடித்த 'ஜல்லிக்கட்டு',

'மூன்றாவது கண்' என்பது காலத்தின் கட்டாயம்: விக்ரம்

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நாளுக்கு நாள் குற்றங்கள் பெருகிக்கொண்டே போகிறது. இரவில் மட்டுமின்றி பகலிலும் தற்போது கொலை, கொள்ளை,

தல அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.