செக்க சிவந்த வானம் படத்தின் புதிய பாடலின் வைர வரிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
செக்க சிவந்த வானம்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ஏற்கனவே அனைத்து பாடல்களும் ஹிட்டாகியுள்ளது. மணிரத்னம்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்திலும் பாடல்கள் ஹிட்டாவதை போல இந்த படத்தின் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்காக நேற்று ஒரு புதிய பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பாடல்களின் வரிகள் குறித்தும் பாடலாசிரியர் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். வைரமுத்துவின் வைர வரிகள் இதோ
எங்கே எங்கே வீழ்வோம் என்றே
அறியா மழைத்துளிகள்
விதைமேல் ஒன்றாய்
சிதைமேல் ஒன்றாய்
வீழ்வதே பிராப்தம்
விதி வேட்கையே
பிராப்தம் - பிராப்தம்
*
சூழ்கிறதே
இதயமற்ற காலமே
உதிரம் சூழ்கிறதே
உதிரம் சூழ்கிறதே!
வாழ்வையே உதிரம் சூழ்கிறதே!
எந்த வழி ஏக
எந்த வழி ஏக
ஆசைத் தீயில் லோகம் வேகின்றபோது
வானும் மண்ணும் செக்கச் சிவக்கும்
கடல் நீலம் எல்லாம் உதிரம் ஆனால்
செம்மழை தானே வையம் எங்கும் பெய்யும்
உதிரம் சூழ்கிறதே வாழ்வையே!
வெற்றிகளோ தோல்விகளோ
முடிவுகளோ கூட
பிராப்தம்
கோள்கள் எல்லாம் சூரியனைச் சுற்றுவதும்
காலத்தின் சரிபாதி இருளுக்குள் நீந்துவதும்
வாழ்வோடு நீகாணும் வரம்போன்ற சாபம் எல்லாம்
இன்பம் போல் காணும் துன்பம் எல்லாம்
பிராப்தம்
இன்பம் போல் துன்பம் பிராப்தம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com