'மூன்றாவது கண்' என்பது காலத்தின் கட்டாயம்: விக்ரம்

  • IndiaGlitz, [Monday,September 17 2018]

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நாளுக்கு நாள் குற்றங்கள் பெருகிக்கொண்டே போகிறது. இரவில் மட்டுமின்றி பகலிலும் தற்போது கொலை, கொள்ளை, செயின்பறிப்பு குற்றங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனை கட்டுப்படுத்த அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமிரா வைக்க வேண்டும் என்று காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிசிடிவியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில் சீயான் விக்ரம் நடித்துள்ளார். ஒரு நிமிடம் ஓடும் 'மூன்றாவது கண்' என்ற இந்த குறும்படத்தின் வெளீயீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விக்ரம் கலந்து கொண்டார். சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் குறும்படத்தை ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட, நடிகர் விக்ரம் பெற்றுக் கொண்டார்.

பின்னர் இந்த விழாவில் பேசிய விக்ரம், 'இன்றைய காலகட்டத்தில் சிசிடிவி கேமிரா என்பது மிகவும் அவசியமான ஒன்று. என்னுடைய வீட்டில் நான் சிசிடிவி கேமிரா பொருத்தியுள்ளேன். நம் எல்லோருடிய வீட்டிலும் சிசிடிவி கேமிரா பொருத்துவது ஒரு பெரிய விஷயம் அல்ல. இதனால் குற்றங்கள் குறைவது மட்டுமின்றி குற்றம் நடக்கும் முன்னரே தடுக்கவும் முடியும். இதுவொரு விழிப்புணர்ச்சி என்று நான் கூறவில்லை, நாம் அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு செயல்' என்று பேசினார்.