என்.டி.டி.வி பிரணாய்ராய் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு

  • IndiaGlitz, [Monday,June 05 2017]

இந்தியாவின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான என்.டி.டி.வி-யின் துணை நிறுவனர் பிரணாய்ராய் வீட்டில் இன்று காலை முதல் அதிரடியாக சிபிஐ சோதனை செய்து வருகிறது. இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் இந்தியாவின் முன்னணி ஊடகங்களின் நிருபர்கள் பிரணாய்ராய் வீட்டில் குவிந்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

என்.டி.டி. துணை நிறுவனர் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் மீது தனியார் வங்கி ஒன்றுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் இதனடிப்படையில் இந்த ரெய்டு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. டெல்லி மற்றும் டேராடூன் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த ரெய்டு என்.டி.டி.வி நிறுவனத்தின் மீதா? அல்லது பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ஆகியோர்களின் சொந்த நடவடிக்கைக்கா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.

கடந்த 1988ஆம் ஆண்டு பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் இணைந்து என்.டி.டி.வியை தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கனரக ராக்கெட்டை முதன்முதலில் செலுத்தும் இஸ்ரோ: வரலாற்று நிகழ்வு என விஞ்ஞானிகள் பெருமிதம்

விண்வெளித்துறையில் இந்திய விஞ்ஞானிகள் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு சவால்விடும் வகையில் வெற்றிகரமாக செயற்கைக்கொள்களை அனுப்பி வைக்கும் நிலையில் இன்று ஜிஎஸ்எல்வி மார்க் - 3 ராக்கெட் (GSLV-Mark III launch) என்ற ராக்கெட்டை இந்தியா விண்ணில் செலுத்துகிறது...

கடந்த வார ரிலீஸ் படங்களின் சென்னை வசூல் விபரங்கள்

கடந்த வெள்ளியன்று 'ஒரு கிடாயின் கருணை மனு, '7 நாட்கள்', 'போங்கு' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் இந்த மூன்று படங்களுமே கடந்த வார இறுதி நாட்களில் சராசரி வசூலை பெற்றுள்ளது...

ஆறாவது வாரத்திலும் அசராமல் வசூல் செய்து வரும் 'பாகுபலி 2'

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாகி ஆறாவது வாரமாக உலகின் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது...

தேசிய விருது பெற்ற பட இயக்குனருடன் இணையும் உதயநிதி

பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் பிரியதர்ஷன் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் 'கோபுர வாசலிலே', 'சினேகிதியே', 'லேசா லேசா', 'காஞ்சிவரம்' உள்பட பல தரமான திரைப்படங்களை இயக்கியுள்ளார்...

பிரபல தயாரிப்பாளரின் பிறந்த நாள் விழாவில் விஜய்-சமந்தா

பிரபல இயக்குனர் ராம நாராயணன் அவர்கள் ஆரம்பித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே....