சென்சார் அதிகாரிகள் மீது விஷால் கூறிய புகார்.. சிபிஐ எடுத்த அதிரடி நடவடிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்சார் அதிகாரிகள் மீது நடிகர் விஷால் புகார் கூறிய நிலையில் இந்த புகார் மீது சிபிஐ அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பை சென்சார் செய்வதற்காக சென்சார் அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக விஷால் திடுக்கிடும் புகார் ஒன்றை தெரிவித்திருந்தார். மேலும் அவர் லஞ்சம் கொடுத்த அதிகாரிகளின் பெயர் மற்றும் வங்கி கணக்குகளையும் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசு இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்பட்டது. இதனை அடுத்து விஷால், மத்திய அரசுக்கும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ’மார்க் ஆண்டனி’ இந்தி பட தணிக்கை சான்று தர லஞ்சம் கேட்ட அதிகாரிகள் மற்றும் இடைத்தார்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் இடைத்தரகர்கள் என்று கருதப்படும் மெர்லின் மேனகா, ராஜன் ஜிஜா ராமதாஸ் உள்ளிட்ட மூன்று பெயர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சென்சார் அதிகாரிகள் மீது சிபிஐ நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. விஷால் புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதை அடுத்து திரையுலகினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout