பத்மாவதி' படத்திற்கு 'யூ/ஏ சான்றிதழ் அளித்து நிபந்தனையும் விதித்த சென்சார் போர்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
தீபிகா படுகோனே நடிப்பில் சஞ்சய்லீலா பன்சாலி இயக்கிய 'பத்மாவதி' திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் இருந்ததால் இந்த படம் தணிக்கை செய்யப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது ஒருசில காட்சிகள் நீக்கம், டைட்டில் மாற்றம் ஆகிய நிபந்தனைகளை விதித்து படத்திற்கு 'யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு.
'பத்மாவதி' என்ற டைட்டிலை 'பத்மாவத்' என்று மாற்றம் செய்ய வேண்டும் என்றும், 26 இடங்களில் கட் செய்ய வேண்டும் என்றும் தணிக்கை குழுவினர் விதித்த நிபந்தனைகளை படக்குழுவினர் ஏற்றுக்கொண்டால் சான்றிதழ் அளிக்கப்படும் என்றும் தணிக்கை குழுவின் இந்த நிபந்தனைகள் படக்குழுவினர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.
இம்மாதம் 1ஆம் தேதியே வெளியாக வேண்டிய இந்த படம் எதிர்ப்புகள் மற்றும் தணிக்கை ஆகாததால் ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டிருந்த நிலையில் தற்போது தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிட்டதால் மிக விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout