மெர்சல் சென்சார் சான்றிதழில் திடீர் சிக்கலா?

  • IndiaGlitz, [Saturday,October 14 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்சாருக்கு சென்று 'யூ/ஏ சான்றிதழ் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் இன்னும் தயாரிப்பாளரிடம் வழங்கப்படவில்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் 'விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து NOC சான்றிதழ் இன்னும் கிடைக்கப் பெறாததால் சென்சார் சான்றிதழ் தயாரிப்பாளருக்கு வழங்கப்படவில்லை என தெரிகிறது.

'மெர்சல்' இசை வெளியீட்டு விழாவில் 'இந்த உலகத்துல நம்மள அத்தனை எளிதா வாழ விடமாட்டாங்க' என்று விஜய் கூறியது போல் இந்த படத்திற்கு தடைகள் மேல் தடையாக வந்து கொண்டிருக்கின்றது. இருப்பினும் இத்தனை தடைகளை தகர்த்து முன்னேறியுள்ள இந்த படம் இந்த தடையையும் சமாளித்து கம்பீரமாக தீபாவளி அன்று திரைக்கு வரும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு விஜய் ரசிகர்களிடமும் உள்ளது. 

More News

ஆபாச வீடியோ குறித்த விழிப்புணர்வு திரைப்படம்: ஹரி உதவியாளர் பேட்டி

இயக்குனர் ஹரி மற்றும் பிரகாஷ்ராஜ் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் சஜோசுந்தர் இயக்கியுள்ள திரைப்படம் 'X வீடியோ

நடிகர் சந்தானம் ஜாமீன் மனு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

பிரபல நடிகர் சந்தானம் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கும் நடந்த கொடுக்கல் வாங்கல் தகராறில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர்

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்

மெர்சல் திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதே தினத்தில் சசிகுமாரின் 'கொடிவீரன்' உள்பட ஒருசில படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விஷால் அதிரடி அறிவிப்பு எதிரொலி: திரையரங்க உரிமையாளர்கள் அவசர கூட்டம்

திரையரங்கு கட்டண உயர்வு, ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி ஆகியவை காரணமாக திரைப்படம் பார்க்க வரும் பாமர ரசிகர்கள் ஒரு படம் பார்க்க நபர் ஒன்றுக்கு ரூ.300க்கும் மேல் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

'மெர்சல்' இயக்குனரின் அடுத்த பட டைட்டில் இதுதான்

தளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ள ஒவ்வொரு தடையாக தகர்க்கப்பட்டு வருகிறது