பொள்ளாச்சி விவகாரம்: ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு சிபிசிஐடி கடிதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் கடந்த சில ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தாலும், சமூக வலைத்தளங்களில் வீடியோ, ஆடியோ வெளியான பின்னரே தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனையடுத்தே சுதாரித்த காவல்துறை திருநாவுக்கரசு உள்பட 4 பேர்களை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய வீடியோக்களை அழிக்க கோரி முன்னணி சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி கடிதம் .
பொள்ளாச்சி பாலியல் சம்பந்தமான வீடியோ, ஆடியோக்கள் மில்லியன் கணக்கில் ஷேர் செய்யப்பட்டுள்ளதோடு பல தனியார் இணையதளங்களிலும் வெளியாகியுள்ளது. இவை அனைத்தையும் அழிப்பது சாத்தியமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை அழிப்பதில் காட்டும் ஆர்வத்தை குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதிலும் சிபிசிஐடி போலீசார் காண்பிக்க வேண்டும் என்று சமூக வலைத்தள பயனாளிகள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout