கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டினார்கள்: சிபிசிஐடி குறித்து சுசித்ரா திடுக் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல் துறையினரால் அடித்து கொல்லப்பட்டா விவகாரம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதற்கு பாடகி சுசித்ராவின் வீடியோவும் ஒரு முக்கிய காரணம். அவரது வீடியோ வெளிவந்த பின்னரே இந்த வழக்கு அனைவராலும் திரும்பி பார்க்கப்பட்டது. மதுரை ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது, சிபிசிஐடி அதிரடியாக கைது நடவடிக்கை எடுத்தது எல்லாம் இந்த வீடியோவுக்கு பின்னர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் சிபிசிஐடி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் பாடகி சுசித்ராவின் வீடியோவை யாரும் நம்பவேண்டாம் என்றும், அதை யாரும் பகிர வேண்டாம் என்றும், அந்த வீடியோவில் காவல்துறையினருக்கு எதிராக தூண்டி விடும் கருத்துக்கள் இருப்பதாகவும் இந்த வீடியோவை பகிர்ந்த அனைவரும் நீக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனையடுத்து சுசித்ராவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சாத்தான்குளம் வீடியோவை நீக்கினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த பாடகி சுசித்ரா ’சிபிசிஐடி போலீசார் என்னை அழைத்தார்கள். போலி செய்திகளை பரப்பியதாக கைது செய்யப்படுவீர்கள் என பயமுறுத்தினார்கள். அதன் பின்னர் எனது வழக்கறிஞரின் அறிவுரைப்படியே நான் அந்த வீடியோவை நீக்கியுள்ளேன். இருப்பினும் மக்கள் இந்த வழக்கை கவனத்துடன் பார்க்க வேண்டும். இந்த வழக்கில் பல தவறான நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு உள்ளன’ என்று தெரிவித்துள்ளார். சிபிசிஐடி போலீசார் மிரட்டியதால்தான் அந்த வீடியோவை நீக்கியதாக சுசித்ரா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Correction: The CB-CID called. And threatened arrest for spreading fake news with intent to cause anarchy. Deleted the video under the advise of my lawyer who said they are definitely capable of doing it. Pls watch this case people - there’s a lot of foul play being employed. https://t.co/MeALn0o8RA
— Suchitra (@suchi_mirchi) July 11, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments