கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டினார்கள்: சிபிசிஐடி குறித்து சுசித்ரா திடுக் தகவல்

சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல் துறையினரால் அடித்து கொல்லப்பட்டா விவகாரம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதற்கு பாடகி சுசித்ராவின் வீடியோவும் ஒரு முக்கிய காரணம். அவரது வீடியோ வெளிவந்த பின்னரே இந்த வழக்கு அனைவராலும் திரும்பி பார்க்கப்பட்டது. மதுரை ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது, சிபிசிஐடி அதிரடியாக கைது நடவடிக்கை எடுத்தது எல்லாம் இந்த வீடியோவுக்கு பின்னர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் சிபிசிஐடி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் பாடகி சுசித்ராவின் வீடியோவை யாரும் நம்பவேண்டாம் என்றும், அதை யாரும் பகிர வேண்டாம் என்றும், அந்த வீடியோவில் காவல்துறையினருக்கு எதிராக தூண்டி விடும் கருத்துக்கள் இருப்பதாகவும் இந்த வீடியோவை பகிர்ந்த அனைவரும் நீக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனையடுத்து சுசித்ராவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சாத்தான்குளம் வீடியோவை நீக்கினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாடகி சுசித்ரா ’சிபிசிஐடி போலீசார் என்னை அழைத்தார்கள். போலி செய்திகளை பரப்பியதாக கைது செய்யப்படுவீர்கள் என பயமுறுத்தினார்கள். அதன் பின்னர் எனது வழக்கறிஞரின் அறிவுரைப்படியே நான் அந்த வீடியோவை நீக்கியுள்ளேன். இருப்பினும் மக்கள் இந்த வழக்கை கவனத்துடன் பார்க்க வேண்டும். இந்த வழக்கில் பல தவறான நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு உள்ளன’ என்று தெரிவித்துள்ளார். சிபிசிஐடி போலீசார் மிரட்டியதால்தான் அந்த வீடியோவை நீக்கியதாக சுசித்ரா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

தங்கக்கடத்தல் அரங்கேறுவது எப்படி??? கேரள அரசியலையே ஆட்டிப்படைக்கும் புதிய சர்ச்சை!!!

கேரள முதலமைச்சரின் செயலாளர் முதற்கொண்டு முக்கியப் புள்ளிகள் சம்பந்தப்பட்ட விவகாரமாக தற்போது கேரளாவின் தங்கக்கடத்தல் வழக்கு மாறியிருக்கிறது

கட்டப்பா கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர்: விஜயேந்திர பிரசாத் தகவல் 

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்பட பலர் நடித்த 'பாகுபலி' திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி,

2000ஐ நெருங்கும் தமிழக கொரோனா பலி எண்ணிக்கை: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையிலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வந்தாலும் கொரோனாவால் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை தினமும் 60க்கும் மேல் உள்ளது

நான்காவதும் பெண் குழந்தை: 8 மாத கர்ப்பிணி மனைவியை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த கணவன்

ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் பெற்ற மனைவி, நான்காவதாக வயிற்றில் உள்ள குழந்தையும் பெண் குழந்தை என்பதை அறிந்து ஆத்திரமடைந்த கணவர், 8 மாத கர்ப்பிணி என்றும் பாராமல்

அமைச்சர் கே.பி.அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் பாமர மக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏகளுக்கும்