ஜெயராஜ் கடைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தும் சிபிசிஐடி டி.எஸ்.பி: தாமாக முன்வந்து தகவல்களை தரும் வியாபாரிகள்
- IndiaGlitz, [Wednesday,July 01 2020]
சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில் இதுகுறித்து மதுரை ஐகோர்ட் கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து உடனடியாக விசாரணையை தொடங்கி விட்டனர்.
டிஎஸ்பி அனில்குமார் தலைமையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் சற்று முன்னர் டிஎஸ்பி அனில்குமார் சாத்தான்குளத்தில் நேரடியாக சென்று ஜெயராஜ் கடை அமைந்துள்ள பகுதியில் ஆய்வு செய்து வருகிறார்.
மேலும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் அவர் விசாரணை செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் முக்கிய ஆதாரமாக அமைந்துள்ள சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பகுதிகளில் டிஎஸ்பி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் காவல் நிலையத்தில் அழிக்கப்பட்ட சிசிடிவி பதிவுகளை மீட்கும் பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் ஜெயராஜ் கடை அருகே நேரில் சென்று விசாரணை நடத்தும் டிஎஸ்பி மற்றும் அதிகாரிகளிடம் அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தாமாகவே முன் வந்து நடந்த சம்பவத்தை கூறி வருவதாகவும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனை அடுத்து டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விரைவில் இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்து குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.