சிபிசிஐடி விசாரணையின்போது கலங்கி அழுத சப் இன்ஸ்பெக்டர்: பரபரப்பு தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் குறித்த வழக்கை கையில் எடுத்தவுடன் சாத்தான்குளம் சென்ற சிபிசிஐடி போலீசார், முதலில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து, ஒரு பிரிவினர் ஜெயராஜ் மொபைல் கடைக்கும், இன்னொரு பிரிவினர் பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், கான்ஸ்டபிள் முருகன் ஆகியோர்களிடம் நடத்திய விசாரணையின் போது என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் கசிந்துள்ளது
மூன்று பேர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்த போது ’கைது செய்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் ஏன் அவ்வளவு மூர்க்கத்தனமாக அடித்தீர்கள்’ என்று கேட்ட போது தாங்கள் அப்போது மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், கைதானவர்களை சாதாரண கைதி போல தான் தாக்கினோம் என்றும் ஆனால் அவர்கள் உயிர் இழப்பார்கள் என்று சற்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியதாக கூறப்படுகிறது
மேலும் உதவி ஆய்வாளராக இருந்த பாலகிருஷ்ணன் மிகவும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், இந்த சம்பவத்திற்கு பிறகு தனது குடும்பத்தின் நிலை என்ன ஆகும் என்று எண்ணி அவர் விசாரணையின் போது கண்ணீர் விட்டு கலங்கியதாகவும் கூறப்படுகிறது
மேலும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த மூன்று பேரையும் சிபிசிஐடி போலீசார் சமாதானப்படுத்தியதோடு, மூவரும் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் மூன்று பேரும் சிறைக்குக் கொண்டு செல்லும் வரை மிகுந்த மன அழுத்தத்திலிருந்து இருந்ததாக சிபிசிஐடி தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout