காவிரி தீர்ப்பு: கமல்ஹாசனின் ரியாக்சனும், ரஜினியின் மெளனமும்
Send us your feedback to audioarticles@vaarta.com
பல வருடங்களாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இடையே இருந்து வந்த காவிரி பிரச்சனைக்கு ஒருவழியாக இன்று இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பு தமிழகத்திற்கு பாதகமாகவும், கர்நாடகத்திற்கு சாதகமாகவும் வந்துள்ளதாக அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது காவிரி நடுவர் மன்றம், 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் அதில் இருந்து 14.75 டிஎம்சி நீர் குறைத்து 177.25 டிஎம்எசி தண்ணீரை மட்டும் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறிய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது: 'காவிரி தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. தண்ணீர் குறைக்கப்பட்டது ஏமாற்றம்தான். இருந்தாலும் கிடைத்திருக்கும் இந்த தீர்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இந்த நீரை எப்படி உபயோகமாகப் பயன்படுத்த வேண்டுமோ, அதை செய்ய வேண்டும். ஆனால் தீர்ப்பு அழுத்தமாக இருப்பது ஆறுதலாக இருக்கிறது. ஓட்டுக்காக அரசியல்வாதிகள் காவிரி சர்ச்சையை தூண்டிவிடக் கூடாது. இரு மாநில விவசாயிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். வாக்கு விளையாட்டு விளையாடுகிறேன் என்று சர்ச்சையை ஏற்படுத்திவிடக் கூடாது. ஒற்றுமையாக இருந்தால் நதிகளை இணைக்க முடியும். நிலத்தடி நீர்மட்டத்தை அரசு பாதுகாக்கவில்லை என்றால் நாம் பாதுகாக்க வேண்டும்’ என்று கூறினார்
இந்த நிலையில் ஏற்கனவே ரஜினிகாந்த் ஒரு கன்னடர் என்று ஒருசில அரசியல்வாதிகளால் விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில் கர்நாடகத்திற்கு சாதகமாக வந்துள்ள இந்த தீர்ப்பு குறித்து ரஜினி எந்த கருத்தும் இதுவரை கூறாமல் மெளனம் காத்து வருகிறார். நான் ஒரு பச்சைத்தமிழன் என்று கூறிய ரஜினிகாந்த், இந்த தீர்ப்பு குறித்து கருத்து சொல்ல வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். ரஜினிகாந்த் இந்த தீர்ப்பு குறித்து என்ன கருத்தை கூறவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments