காவிரி தீர்ப்பு: கமல்ஹாசனின் ரியாக்சனும், ரஜினியின் மெளனமும்

  • IndiaGlitz, [Friday,February 16 2018]

பல வருடங்களாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இடையே இருந்து வந்த காவிரி பிரச்சனைக்கு ஒருவழியாக இன்று இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பு தமிழகத்திற்கு பாதகமாகவும், கர்நாடகத்திற்கு சாதகமாகவும் வந்துள்ளதாக அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது காவிரி நடுவர் மன்றம், 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் அதில் இருந்து 14.75 டிஎம்சி நீர் குறைத்து 177.25 டிஎம்எசி தண்ணீரை மட்டும் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறிய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது: 'காவிரி தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. தண்ணீர் குறைக்கப்பட்டது ஏமாற்றம்தான். இருந்தாலும் கிடைத்திருக்கும் இந்த தீர்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இந்த நீரை எப்படி உபயோகமாகப் பயன்படுத்த வேண்டுமோ, அதை செய்ய வேண்டும். ஆனால் தீர்ப்பு அழுத்தமாக இருப்பது ஆறுதலாக இருக்கிறது. ஓட்டுக்காக அரசியல்வாதிகள் காவிரி சர்ச்சையை தூண்டிவிடக் கூடாது. இரு மாநில விவசாயிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். வாக்கு விளையாட்டு விளையாடுகிறேன் என்று சர்ச்சையை ஏற்படுத்திவிடக் கூடாது. ஒற்றுமையாக இருந்தால் நதிகளை இணைக்க முடியும். நிலத்தடி நீர்மட்டத்தை அரசு பாதுகாக்கவில்லை என்றால் நாம் பாதுகாக்க வேண்டும்’ என்று கூறினார்

இந்த நிலையில் ஏற்கனவே ரஜினிகாந்த் ஒரு கன்னடர் என்று ஒருசில அரசியல்வாதிகளால் விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில் கர்நாடகத்திற்கு சாதகமாக வந்துள்ள இந்த தீர்ப்பு குறித்து ரஜினி எந்த கருத்தும் இதுவரை கூறாமல் மெளனம் காத்து வருகிறார். நான் ஒரு பச்சைத்தமிழன் என்று கூறிய ரஜினிகாந்த், இந்த தீர்ப்பு குறித்து கருத்து சொல்ல வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். ரஜினிகாந்த் இந்த தீர்ப்பு குறித்து என்ன கருத்தை கூறவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

விமல் லட்சியத்தை உடைத்தாரா வரலட்சுமி? கலகலப்பாக உருவாகும் ' கன்னிராசி'

நடிகர் விமல் நடித்த 'மன்னார் வகைறயா' ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் தற்போது ஐந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று 'கன்னிராசி

முடிவுக்கு வந்தது தனுஷின் மாஸ் கேங்க்ஸ்டர் திரைப்படம்

தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வந்த 'வடசென்னை' திரைப்படத்தின் முதல்பாக படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

கமல்ஹாசனுக்கு திருமாவளவன் அழைப்பு: அணி சேருவார்களா?

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி புதிய அரசியல் கட்சியை இராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவரின் இல்லத்தில் அறிவிக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

சிவகார்த்திகேயன் தற்போது 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அமலாபால் காதலர் தினத்தை யாருடன் கொண்டாடினார் தெரியுமா?

கடந்த சில மாதங்களாகவே நடிகை அமலாபால் ஊடகங்களின் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று கொண்டிருக்கின்றார்,.