காவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டின் புதிய உத்தரவு

  • IndiaGlitz, [Thursday,May 03 2018]

காவிரி விவகாரம் குறித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் இன்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி வரைவு திட்டத்தை தாக்கல் செய்யுமா? அல்லது மீண்டும் அவகாசம் கேட்குமா? என்ற நிலையில் அனைவரின் எதிர்பார்ப்பின்படி மீண்டும் அவகாசம் கேட்டது மத்திய அரசு

பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் வரைவு திட்டத்திற்கான ஒப்புதலை பெற இயலவில்லை என்றும், இதனால் மேலும் அவகாசம் தேவை என்றும் மத்திய அரசின் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதற்கு பதிலளித்த சுப்ரீம் கோர்ட் அமர்வு, 'வரைவு திட்டம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை வரும் செவ்வாய்கிழமைக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கின் விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தது.

மேலும் தற்போது செயல்திட்டம் அமலில் இல்லாத நிலையில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறப்பது கர்நாடக அரசின் கடமை என்றும், அவ்வாறு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுத்தால் கர்நாடக தலைமை செயலாளரை நீதிமன்றத்திற்கு அழைக்கும் நிலை ஏற்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது.