காவிரி விவகாரம்: திமுக பிரமுகரின் கேள்விக்கு பதிலளித்த எடிட்டர் ரூபன்
Send us your feedback to audioarticles@vaarta.com
காவிரி மேலாண்மை அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என ஒருசில திரையுலக பிரபலங்கள் நடத்திய போராட்டம் தற்போது அவர்களுக்கே எதிராக திரும்பியுள்ளது.
47 நாட்கள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்து நாளை முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை புதிய படங்கள் ரிலீசையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி வருகிறது. ஏற்கனவே உதயநிதி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் இந்த கோரிக்கையை வைத்துள்ள நிலையில் தற்போது திமுக பிரமுகர் ஜெ.அன்பழகன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில், 'ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடக்கவிடாமல் செய்து தேசிய அளவில் கவனம் ஈர்த்த கோலிவுட்டைச் சேர்த்தவர்களின் போராட்டத்தை நான் வரவேற்கிறேன். இவ்வாறே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குவரை புதிய திரைப்படங்களை வெளியிடுவதை தமிழ் சினிமா தடுக்குமா?” என்று பதிவு செய்துள்ளார்.
இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள எடிட்டர் ரூபன் கூறியதாவது: "இதில் வித்தியாசம் உள்ளது சார். ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக கோலிவுட்டைச் சேர்ந்த சிலர் நடத்திய போராட்டத்துக்கு நான் உட்பட பலரும் எதிராகவே இருந்தோம். கோலிவுட் வெறும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் மட்டுமல்ல, குடும்பம் மற்றும் வாழ்வாதாரத்தைச் சார்ந்தது. ஒரு எடிட்டராக பலர் வேலை இழந்து இருப்பதை நான் பார்க்கிறேன். சினிமா ஏற்கெனவே இறந்து கொண்டிருக்கிறது”என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout