உலக நாடுகளில் இதுவரை கொரோனா படுத்தி இருக்கும் பாடு!!!

 

கோவிட் – 19 என்று அழைக்கப் படும் கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. தற்போது சீனாவில் மட்டும் இந்த வைரஸால் 2700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80,000 பேருக்கு நோய் தொற்று இருப்பதை அந்நாட்டு சுகாதாரத்துறை உறுதி செய்து இருக்கிறது.

சீனாவைத் தாண்டி இதுவரை 30 நாடுகளில் இந்த வைரஸ் பரவியிருக்கிறது. 1200 க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் படிப்படியாக இந்த வைரஸ் தொற்று பரவி இருப்பதை அந்நாடுகளின் சுகாதாரத் துறைகள் உறுதிப் படுத்தி வருகின்றன.

சீனாவை தாண்டி உலக நாடுகள் பலவற்றிற்கு இந்த நோய் தொற்று எப்படி பரவுகிறது என்று பல தரப்பினர் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். சீனாவுடன் நேரடி தொடர்பு இல்லாத நாடுகளிலும் இந்த நோய் தொற்று தற்போது அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பரவி இருக்கிறது.

அறிகுறிகளை வெளிப்படையாக தெரிந்து கொள்ளும் முன்பே இந்த வைரஸ், நோயினை ஏற்படுத்தி விடுகிறது. அறிகுறிகள் வெளியே தெரியாமல் இருப்பதே இதன் பரவலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது எனப் பல நாடுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா பரவலைத் தொடர்ந்து சர்வதேச சுகாதார அமைப்பு உலக நாடுகள் முழுக்க கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை செய்து இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளிலேயே இத்தாலியில்தான் கொரோனா கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தாலியில் மட்டும் கொரோனா பாதிப்பினால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 300 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க உலகப் புகழ் பெற்ற இத்தாலியின் வெனீஸ் திருவிழாவும் ரத்து செய்யப் பட்டு இருக்கிறது.

சீனாவை தவிர தென்கொரியா அதிக பாதிப்பைச் சந்தித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதுவரை வைரஸ் பாதிப்பால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 900 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மத்தியில் தான் இந்த வைரஸ் அதிகளவு பரவி இருக்கிறது என்ற குற்றச் சாட்டும் அங்கு எழுப்பப் பட்டு வருகிறது. ஷிஞ்சியோன்ஜி தேவாலயத்தில் முதன் முதலில் 61 வயதான ஒரு பெண்மணிக்கு வைரஸ் பாதிப்பு இருந்ததை அந்நாட்டு சுகாதாரத் துறை உறுதி செய்தது. பின்னர் அப்பெண்மணி பல பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்து கொண்டதாகவும் அதனால் தான் இந்த வைரஸ் பலருக்கு பரவியிருக்கிறது எனவும் குற்றச் சாட்டுகள் எழுந்தது. எனவே தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு அந்நாட்டில் தடையும் விதிக்கப் பட்டிருக்கிறது.

இரானில் கொரோனா பாதிப்பினால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 43 பேருக்கு நோய் தொற்று இருப்பது தற்போது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் ஒரு தம்பதியினருக்கு கொரோனா இருப்பதை அந்நாட்டு சுகாதாரத் துறை உறுதி செய்திருக்கிறது.

சுவிட்சர்லாந்து மற்றும் குரேஷியாவில் தலா ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி படுத்தப் பட்டுள்ளது. ஸ்பெயினில் ஒரு மருத்துவர் மற்றும் அவரது மனைவிக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் கொரோனா அறிகுறிகள் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அல்ஜீரியா, எகிப்து நாடுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகளும் தங்களது நாடுகளில் கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதிப் படுத்தி உள்ளனர்.

அமெரிக்காவில் 14 பேருக்கு கொரேனா தொற்று பரவி இருக்கிறது. அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொற்று கட்டப்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 15 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருக்கிறது. இதில் ஒரு தம்பதி விமானத்தில் பயணிக்கும் போது உடல் முழுவதும் பிளாஸ்டிக் கவரால் தங்களை மூடிக்கொண்டு பயணித்து இருக்கின்றனர். இந்த வித்தியாசமான முடிவுக்கு பலர் வரவேற்பும் தெரிவித்து இருந்தனர்.

2004 பரவிய சார்ஸ் உடன் ஒப்பிடும்போது கொரோனா பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கிறது. உலகம் முழுக்கவே சார்ஸ் தாக்கத்தால் 774 பேர் இறந்தனர். தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியாகும் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவது கவலை அளிக்கிறது.

ஜப்பான், டோக்கியோவில் வருகிற ஜுலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப் படுவதாக இருந்தது. வருகிற மே மாதத்திற்குள் கட்டுக்குள் வாரா விட்டால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப் படும் என்பது போன்ற செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும், ஒலிம்பிக் போட்டிகள் இடம் மாற்றப் படுவதைப் பற்றிய முடிவு எதுவும் இல்லை என்பது போன்ற செய்திகளும் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப் படுத்தும் விதமாக, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினரான டிக் பவுண்ட், “டோக்கியோவில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடப்பது கேள்விகுறிதான்” என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இந்தியா நிலவரம்

கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டு அவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப் பட்டு வந்தது குறிப்பிடத் தக்கது. இப்போது அதில் ஒருவர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார். இந்தியா சுகாதாரத்துறை செயலர் ப்ரீத்தி சுதன் “இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கவில்லை” என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார். மேலும், சீனாவில் இருந்து திரும்பியவர்கள் பலரை இந்தியா முழுக்க, சுகாதாரத்துறை கண்காப்பில் வைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் கொரோனா அச்சத்தால் இறைச்சி விற்பனை சரிந்திருப்பதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More News

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு குறித்த அப்டேட் தெரிவித்த பிரபல நடிகர்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

கலவரத்தை தூண்டியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்..?! காவல் துறையை துளைத்தெடுத்த நீதிபதி முரளிதர்.

பாஜக தலைவர் இப்படி பேசியது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று மேத்தா குறிப்பிட்டார். நீதிபதி முரளிதர் எதை செய்வார் என்று மேத்தா பயந்தாரோ அதையே இன்று முரளிதர் சிறப்பாக செய்து முடித்தார்.

டெல்லி கலவரம் ஏற்பட்டது இதனால்தான்: ரஜினியின் சகோதரர் பேட்டி

டெல்லியில் கடந்த மூன்று நாட்களாக கட்டுக்கடங்காத வகையில் வன்முறை, கலவரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த கலவரத்தில் காவல்துறையினர் உள்பட 20 பேர் பலியாகியுள்ளனர்.

பாஜக, கபில் மிஸ்ரா கலவரத்தை தூண்டியது தவறு..! கவுதம் கம்பீர்.

கௌதம் கம்பீர், கபில் மிஸ்ரா ஆகிய இருவருமே பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள். சொந்த கட்சியைச் சேர்ந்தவர்மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்பீர் பேசியிருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சௌதி அரேபியாவில் முதல் முறையாகப் பெண்களுக்கான கால்பந்து லீக் போட்டிகள்!!!

சௌதி  அரேபியாவில் வாழ்க்கை முறைகள் பெரும்பாலும் இஸ்லாமிய சட்ட விதிகளின் படியே கடைப்பிடிக்கப் படுகிறது.