சிம்பு-சுந்தர் சி படத்தில் இணைந்த பிரபல நாயகி

  • IndiaGlitz, [Thursday,September 27 2018]

சிம்பு நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான Attarintiki Dhaaredhi என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் தெரிந்ததே

மேலும் இந்த படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை சமீபத்தில் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் மேலும், ஒரு நாயகி இணைந்துள்ளார். அவர்தான் காத்ரின் தெரசா. ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த 'கலகலப்பு 2' படத்தில் நடித்த காத்ரீன் தெரசா மீண்டும் அவருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கில் ப்ரணிதா நடித்த கேரக்டரில் காத்ரீன் தெரசா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் தொடங்கியது. ஜார்ஜியாவில் சிம்பு மற்றும் சுந்தர் சி இருக்கும் புகைப்படம் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பியதும் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறவுள்ளதாகவும், இதில் காத்ரீன் தெரசா கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

More News

ரஜினி, கமல் கட்சிகள் 4 அமாவாசைக்குள் காணாமல் போய்விடும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின்னர் கோலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் அரசியல் கட்சிகள் ஆரம்பிப்பதிலும் ஏற்கனவே இருக்கும் கட்சிகளை புதுப்பிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அப்ப அது 'விஸ்வாசம்' படத்தின் பாடல் இல்லையா?

தல அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரி இணையத்தில் வைரலானது.

செக்க சிவந்த வானம்: 5 மணி காட்சிக்கு டிக்கெட் புக் செய்த இயக்குனர்

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண்விஜய் நடித்த 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

பிரபல நடிகையின் கலையம்சத்துடன் கூடிய நிர்வாண புகைப்படம்

பிரபல பாலிவுட் நடிகையும் மாடல் அழகியுமான Farrah Kader என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் கலைநயத்துடன் கூடிய நிர்வாண புகைப்படம் ஒன்றை பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

விவசாயிகளுக்கு விஷால் செய்த மிகப்பெரிய உதவி

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ஏற்கும்போது தன்னுடைய படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டின் லாபத்திலிருந்து ஒரு ரூபாய் நலிந்த ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படும்