close
Choose your channels

ஆர்யாவின் அடுத்த பட நாயகி கேதரின் தெரசா

Saturday, February 27, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ்' படத்தின் மூலம் தனது கோலிவுட் பயணத்தை ஆரம்பித்த நடிகை கேதரின் தெரசா, அதன் பின்னர் விஷாலுடன் 'கதகளி' மற்றும் அதர்வாவுடன் 'கணிதன்' ஆகிய படங்களில் நடித்தார்.


கேதரின் தெரசாவின் மூன்று படங்களும் நல்ல வசூலை கொடுத்துள்ள நிலையில் தற்போது ஆர்யாவுடன் நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

விமல், அஞ்சலி நடித்த 'மஞ்சப்பை' என்ற படத்தை இயக்கிய ராகவன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஆர்யா நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த நிலையில் தற்போது அவருக்கு ஜோடியாக நடிக்க கேதரின் தெரசா நடிக்கவுள்ளார்.

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கேதரின் தெரசா ஏற்கனவே தமிழில் 'வீர தீர சூரன்', 'முத்துராமலிங்கம்' போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment