சாலையில் செல்லும் போது திடீரென ஏற்பட்ட விபரீதம்.. மருத்துவமனையில் ரைசா வில்சன்..!

  • IndiaGlitz, [Thursday,August 10 2023]

நடிகை ரைசா வில்சன் சாலையில் நடந்து செல்லும் போது திடீரென பூனை அவரை கடித்ததை எடுத்து அவர் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டதாக புகைப்படத்துடன் கூடிய பதிவை செய்துள்ளார்.

தமிழ் நடிகைகளில் ஒருவரான ரைசா வில்சன், பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட பின்னர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பதும் அதன் பிறகு அவர் ’பியார் பிரேமா காதல்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ’காதலிக்க யாருமில்லை’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு உள்ள பூனையை எடுத்து தூக்கி ஆசையுடன் கொஞ்சியுள்ளார். அப்போது அந்த பூனை அவரை கடித்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’நமது வீட்டில் இருக்கும் பூனைகள் போல் தெருவில் உள்ள பூனைகள் இல்லை’ என்ற கூறியுள்ளார். இந்த நிலையில் பூனை கடித்ததை அடுத்து அவர் மருத்துவமனை சென்று ஊசி போட்டுக் கொண்டதாகவும் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை ரைசா வில்சன் தனது வீட்டில் இரண்டு பூனைகளை செல்லமாக வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மொட்டை தலை.. நெற்றியில் நாமம்.. கையில் மயிலிறகு.. காயத்ரி ரகுராம் புதிய தோற்றம்..!

நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் திடீரென மொட்டை தலை, நெற்றியில் நாமம், கையில் மயிலிறகுடன் உடன் கூடிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்களை

'ஜெயிலர்' FDFS காட்சியில் ரஜினியின் மனைவி, மகள்.. குவியும் பாசிட்டிவ் விமர்சனங்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் இன்று காலை 6 மணிக்கு  தமிழகம் தவிர அனைத்து பகுதிகளிலும் முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில் தமிழகத்தில் 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.

'நான் வந்துட்டேன், எதோ செய்யணும்னு சொன்னியாமே'.. செய்.. துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' டிரைலர்..!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவான 'கிங் ஆஃப் கோதா' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இம்மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல்

நீண்ட எதிர்பார்ப்பு.. ஒரு வருடத்திற்கு பின் ஓடிடியில் ரிலீஸாகும் சிபி சத்யராஜ் படம்..!

சிபி சத்யராஜ் நடித்த 'மாயோன்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான நிலையில் ஒரு வருடம் கழித்து நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் நாளை ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

தயவுசெய்து இதை மட்டும் செய்யாதீங்க, ப்ளீஸ்.. சினேகா வீடியோவுக்கு வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்..!

திரை உலக மற்றும் சின்னத்திரையுலக நட்சத்திரங்கள் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார்கள் என்பது தெரிந்ததே.