பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அழைப்பு

  • IndiaGlitz, [Friday,January 25 2019]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கி வந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் டீசர், டிரைலர், மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில் 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க 6 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கும், 7 முதல் 16 வயது வரையிலான பள்ளி சிறுவர் சிறுமிகளுக்கும், 17 முதல் 21 வயது வரையிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த படத்தில் அதிக குழந்தை நட்சத்திரங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடிக்க வாய்ப்பு உள்ளது.

சிவகார்த்திகேயன் - அர்ஜூன் முதன்முதலாக இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். 24 ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனார்.

 

More News

அமிதாப்பச்சன் மகன் உட்கார்ந்து பார்க்கும் கபடி: ராதாரவி கலகல பேச்சு

ரெளடிகள் மட்டுமே விளையாடும் விளையாட்டாக ஒருகாலத்தில் கருதப்பட்ட கபடி விளையாட்டு இன்று அமிதாப்பச்சன் மகன் உட்கார்ந்து பார்க்கும் நிலையில் உள்ளதாக பிரபல நடிகர் ராதாரவி

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு கடந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்தது. அவர் நடித்த 'இமைக்கா நொடிகள்', 'செக்க சிவந்த வானம்' சீதக்காதி' மற்றும் '96' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் நல்ல வரவேற்பை

ரூ.7500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள்: தமிழக அரசு அதிரடி ஆணை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கடந்த மூன்று நாட்களாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருவதால் அரசு பள்ளிகளில்

சத்யராஜ் மகளின் புரட்சி திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்

புரட்சி தமிழன் சத்யராஜ் அவர்களின் மகள் 'அட்சய பாத்திரம்' என்ற அமைப்பை நடத்தி  ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை அளிக்கும் சமூக சேவையை செய்து வருகிறார் என்பது தெரிந்ததே

96 தெலுங்கு ரீமேக்கில் இயக்குனர் செய்த மாற்றம்: சமந்தா மகிழ்ச்சி

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கிய '96' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.