ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்க புதுமுக நட்சத்திரங்கள் தேவை.. லைகா அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,August 03 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ’லால் சலாம்’ என்ற திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது என்பதையும் இந்த படத்தை ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

ரஜினியின் 170 வது படமாக அமைய இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக விக்ரம் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் இது ஒரு போலி என்கவுண்டர் கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

’ஜெய்பீம்’ போலவே இந்த படத்திலும் ஒரு முக்கியமான சமூக கருத்து இருக்கும் என்றும் இந்த படம் ரஜினியின் திரையுலக வாழ்வில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்கு புதுமுக நட்சத்திரங்கள் தேவை என லைகா விளம்பரம் வெளியிட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் ஞானவேல் இயக்கும் திரைப்படத்திற்கு முதற்கட்டமாக நாடகத்துறையிலும் திரைப்பட பயிற்சி பள்ளி மற்றும் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கும்படி லைகா அந்த விளம்பரத்தில் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களுடைய புகைப்படம் முழு விவரங்களை லைகா நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

More News

டாப்சியின் அடுத்த தமிழ்ப்படம்.. கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ரூ.10 கோடி செலவு..!

நடிகை டாப்ஸி, தனுஷ் நடித்த 'ஆடுகளம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானாலும் தற்போது அவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார் என்பது தெரிந்ததே. இருப்பினும் அவர் தமிழில் அவ்வப்போது ஒரு

ரஜினியின் 'காக்கா' கதைக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்? எதிர்பார்ப்பில் 'லியோ' இசை வெளியீட்டு விழா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த்  பருந்து - காக்கா கதையை கூறினார்.

கொலை செய்வது எப்படி? யூடியூப் பார்த்து 10 ஆம் வகுப்பு சிறுவன் செய்த விபரீதம்!!

தன்னுடன் ஒரே வகுப்பில் படித்துவரும் சக மாணவனுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில் அவரைக் கொலை செய்வதற்காக யூடியூபில் வீடியோக்களைப் பார்த்து

டொனால்ட் டிரம்ப் மீது 4 முக்கிய பிரிவுகளில் வழக்குப்பதிவு… உறுதியானால் நீண்டநாள் சிறையா?

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது 4 முக்கியப் பிரிவுகளில் வாஷிங்கடனில் உள்ள அந்நாட்டு மத்திய நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்துள்ளது

காய்கறி, பழங்களை மட்டுமே சாப்பிட்ட இன்ஸ்டா பிரபலம் உயிரிழப்பு? டயட் காரணமா?

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சைவ உணவு மட்டுமே உடலுக்கு நல்லது எனக் கூறிவந்த இன்ஸ்டா பிரபலம் ஒருவர் திடீரென்று பட்டினி மற்றும் உடல்சோர்வு காரணமாக உயிரிழந்துள்ளது